விஜயவாடா, குண்டூர் மாவட்டத்தை பெண் தனது கள்ளக்காதலனின் உதவியுடன் பிரியாணியில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கணவரைக் கொலை செய்துவிட்டு, பின்னர் அவரது சடலத்தின் அருகே இரவு முழுவதும் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கழித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. துக்கிராலா மண்டலத்திலுள்ள சிலுவூர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவரான லோகம் சிவனகராஜு, வெங்காய வியாபாரி செய்துவந்துள்ளார். இவர் 2007ம் ஆண்டு லட்சுமி மாதுரியைத் திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயவாடாவில் உள்ள ஒரு சினிமா டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வந்த மாதுரி, சட்டெனப்பள்ளியைச் சேர்ந்த கோபி என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. மாதுரி தனது கணவரின் வெங்காய வியாபாரத்தை இழிவாகக் கருதியதாகவும், அதை நிறுத்துமாறு அவரைக் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. கோபி ஹைதராபாத்தில் கார் பயண வணிகம் நடத்தி வந்ததால், மாதுரி தனது கணவரை வேலைக்காக அங்கு அனுப்பியுள்ளார். இருப்பினும், சிவனகராஜு, சிலுவூருக்குத் திரும்பியதால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளன.
காவல்துறையின் கூற்றுப்படி, மாதுரி தனது கணவரைத் தனது கள்ள உறவுக்கு ஒரு தடையாக இருந்ததாக கருதியுள்ளார். ஜனவரி 18ம் தேதி இரவு, சிவனகராஜுவுக்காகத் தயாரிக்கப்பட்ட பிரியாணியில் அவரது மனைவி, சுமார் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மயக்கமடைந்த பிறகு, அவரது காதலன் கோபி, இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோபி சிவனகராஜுவின் மார்பின் மீது அமர்ந்திருக்க, மாதுரி தலையணையால் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது மரணத்தை உறுதிசெய்த பிறகு, கோபி வீட்டை விட்டு வெளியேறினார். அதிர்ச்சியளிக்கும் விதமாக, மாதுரி தனது கணவரின் சடலத்தை அறையில் வைத்தபடியே, இரவு முழுவதும் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதிகாலையில், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி, எதுவும் நடக்காததுபோல் கூச்சலிட்டுள்ளார்.
தம்பதிக்கு இடையின் அடிக்கடி நிகழும் சண்டைகளையும், மாதுரியின் திருமணத்திற்குப் புறம்பான உறவையும் அறிந்திருந்த அக்கம்பக்கத்தினர் சிவனகராஜு மரணத்தில் சந்தேகமடைந்தனர். இறுதிச் சடங்குகளுக்காக உடலை அப்புறப்படுத்தும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, சிவனகராஜுவின் நண்பர்கள் அவரது காதிலிருந்து இரத்தம் வழிவதையும், அதன் அருகே ஒரு காயத்தையும் கவனித்துள்ளனர்.
இதனால் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், மூச்சுத்திணறலால் மரணம் ஏற்பட்டதை பிரேதப் பரிசோதனை உறுதி செய்ததைத் தொடர்ந்து, மாதுரி கைது செய்யப்பட்டு கோபி காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கு குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.