கணவனை கள்ளகாதலனோடு 'ஸ்கெட்ச்' போட்டு கொலை செய்த மனைவி! - சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்

கணவனை கொலை செய்ய கள்ளகாதலனோடு சேர்ந்து திட்டம் தீட்டிய மனைவி.
கணவனை கள்ளகாதலனோடு 'ஸ்கெட்ச்' போட்டு கொலை செய்த மனைவி! - சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்
Published on
Updated on
2 min read

மத்தியப் பிரதேசத்தில் திரைப்படத்தையே மிஞ்சும் அளவிற்கு ஒரு கொலையை அரங்கேற்றியப் பெண். 'திரில்லர்' கதையைப் போலத் தோன்றினாலும், நிஜ வாழ்க்கையில் அரங்கேறிய ஒரு திகிலூட்டும் கதையில், மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் மசாலா வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், துரோகம், அவமானம் மற்றும் குரூரமான சதித்திட்டம் ஆகியவற்றின் கலவையாக அமைந்துள்ளது.

ஏப்ரல் 7ம் தேதி, இரவு மத்தியப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவரான 28 வயதான தேவகிருஷ்ணா புரோஹித் , தனது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்டதற்கான காயங்கள் அவரது உடலில் இருந்தன. அவரது மனைவி பிரியங்கா புரோஹித், அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து, 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகவும், தனது கணவர் அவர்களை எதிர்த்தபோது அவரைக் கொன்றுவிட்டதாகவும் காவல்துறையிடம் தெரிவித்தார். ஆனால், புலனாய்வாளர்கள் இந்த கொலை நிகழ்வின் புள்ளிகளை இணைத்தபோது ​​அந்த பெண்ணின் சூழ்ச்சி புரிய ஆரம்பித்தது. துக்கத்தின் முகமூடிக்குப் பின்னால், தெளிவான திட்டமிடப்பட்ட ஒரு பொய் மறைந்திருப்பதாகக் காவல்துறையினர் பின்னர் தெரிவித்தனர்.

தேவ்கிருஷ்ணாவின் திருமண வாழ்க்கை நீண்ட காலமாகவே பிரச்சனையில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது சகோதரி ஜோதி, 25 வயதான பிரியங்கா, "நீ கருப்பாக இருக்கிறாய்... நீ எனக்குத் தகுதியானவன் அல்ல... எனக்கு உன்னை விட சிறந்த ஒருவர் தேவை" என்று கூறி அடிக்கடி அவரின் கணவரிடம் கூறி அவமானப்படுத்துவார் எனக் குற்றம் சாட்டினார். காவல்துறை விசாரணையின்படி, பிரியங்கா, ராஜ்கரைச் சேர்ந்த 32 வயதான கம்லேஷ் புரோஹித் என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார். தேவ்கிருஷ்ணா தாங்கள் உறவிற்கு தடையாக இருப்பார் என்று எண்ணிய இருவரும் அவரை கொலை செய்ய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்ட ஒரு கொலைச் சதியை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

இதனையடுத்து, ஒரு லட்சம் ரூபாய்க்கு கூலிப்படை கொலையாளி தேவ்கிருஷ்ணாவை கொலை செய்ய நியமிக்கப்பட்டார். கம்லேஷ், தனது கூட்டாளியான சுரேந்திர பாட்டியை இதில் ஈடுபடுத்தி, தேவ்கிருஷ்ணாவைக் கொலை செய்வதற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ததாகவும், அதில் 50,000 ரூபாயை முன்பணமாகக் கொடுத்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். கொலை நடந்த அன்று இரவு, வீட்டின் கதவு வேண்டுமென்றே பூட்டப்படாமல் பிரியங்கா இருந்துள்ளார். சுரேந்திரா உள்ளே நுழைந்து, உறங்கிக் கொண்டிருந்த தேவ்கிருஷ்ணனைத் தாக்கியுள்ளார். இந்த கொலையை ஒரு கொள்ளை சம்பவம் போலக் காட்டுவதற்காக, அறை சூறையாடப்பட்டது, மேலும் மதிப்புமிக்க பொருட்கள் காணாமல் போனதாக கூறப்பட்டன. தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிய பிறகு, தன்னைக் கட்டிப்போட்டு பணயக்கைதியாக வைத்திருந்ததாகக் கூறி, பிரியங்கா தன்னை ஒரு பாதிக்கப்பட்டவராகக் காவல்துறைனரிடம் காட்டிக்கொண்டார்.

ஆனால், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது அந்தத் திட்டம் வெளிச்சத்திற்கு வர தொடங்கியது. பிரியங்கா தனது வாக்குமூலத்தை மாற்றி மாற்றி கூறியதால், காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், திருடப்பட்டுவிட்டதாக அவர் கூறிய மீண்டும் நகைகள் மீட்கப்பட்டன. கைபேசித் தரவுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்கள், கம்லேஷுடனான அவரது தொடர்பையும், கொலை நடந்த சமயத்தைச் சுற்றியுள்ள அழைப்புகளின் வரிசையையும் மேலும் அம்பலப்படுத்தின. தொடர்ச்சியான விசாரணையின் கீழ், பிரியங்கா இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பிரியங்கா மற்றும் கம்லேஷ் புரோஹித் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், கூலிப்படை கொலையாளி என சந்தேகிக்கப்படும் சுரேந்திர பாட்டி தலைமறைவாக உள்ளத்தக்க போலீசார் கூறியுள்ளனர். கொலைக்கு முன்னர் ஏதேனும் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதா? என்பதை உறுதி செய்வதற்கான தடயவியல் அறிக்கைகளுக்காக புலனாய்வாளர்கள் காத்திருக்கும் வேளையில், அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது. தேவ்கிருஷ்ணாவின் தாயார் கேஞ்சி பாய், "அவர்கள் இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" எனக் கோரியுள்ளார். மேலும், "குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். எனக்கு நீதியைத் தவிர வேறு எதுவும் வேண்டாம்," என்று அவர் கூறினார். இதனை குறித்து தேவ்கிருஷ்ணாவன் சகோதரி, "என் சகோதரனுடன் தொடர்ந்து சண்டையிட்டாள், தன் கைப்பேசியிலேயே மூழ்கி இருந்தாள், மேலும் அவனை அவமானப்படுத்தினாள். 2020ம் ஆண்டிலிருந்தே அவள் வேறு ஒருவருடன் உறவில் இருப்பதாக நான் அப்போதே சந்தேகித்து வந்தேன். குடும்பத்தில் அமைதியைக் காப்பதற்காக என் சகோதரர் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டார்," என்று அவரின் சகோதரி கூறினார். பிரியங்கா அடிக்கடி நீண்ட நேரம் வீட்டை விட்டு வெளியே செல்வதாகவும், வீட்டுப் பொறுப்புகளைத் தவிர்ப்பதாகவும், மேலும் தனது நடத்தை குறித்து தேவ்கிருஷ்ணாவும் அவரது தாயும் விவாதிப்பதைத் தடுப்பதற்காக அவர்களுக்கு இடையே இடைவெளியை உருவாக்குவதாகவும் ஜோதி குற்றம் சாட்டினார்.

திடீரென நிகழ்ந்த வன்முறைச் செயல் போலத் தோன்றியது, இந்த சம்பவம் தெளிவாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றிய கொலை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com