திருப்பூர் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை 72 வயதாகும் இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் இவரது மனைவி 70 வயதான மாரியம்மாள் நோய் வாய் பட்டு படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு 40 வயதில் ராஜகோபால் என்ற மகன் உள்ளார். மாரியம்மாள் நீண்ட நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
செல்லத்துரை மற்றும் ராஜகோபால் தான் மாரியம்மாளை கவனித்து வந்துள்ளனர். நோயால் வலி தாங்க முடியாமல் மாரியம்மாள் அவ்வப்போது பலத்த சத்தமிட்டுள்ளார். தாய் இவ்வாறு நோயால் துடிப்பதை பார்க்க முடியாமல் ராஜகோபால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இருப்பினும் தாயை அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாரியம்மாளை பார்க்க அவரது தங்கை ஏசம்மாள் தாராபுரத்திற்கு வந்துள்ளார். மாரியம்மாள் தனது உடல்நிலை குறித்து தங்கையிடம் சொல்லி கண்ணீர் வடித்துள்ளார். அக்காவின் இந்த நிலையை பார்க்க முடியாத ஏசம்மாள் வீட்டிற்கு வெளியில் சென்று அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் மாரியம்மாள் அலறும் சத்தம் கேட்டு ஏசம்மாள் உள்ளே வந்து பார்த்துள்ளார்.
அப்போது மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்து கிடந்துள்ளார். அருகில் ராஜகோபாலன் கையில் கத்தியுடன் நின்றுள்ளார் இதை பார்த்து அதிர்ந்து போன ஏசம்மாள் போலீசில் தகவலாளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் போலீசார் ராஜகோபால கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் “தாய் தினம் தினம் துடிதுடிப்பதை என்னால் பார்க்க முடியவில்லை என்றும் அதனால் கொலை செய்ததாகவும்” தெரிவித்துள்ளார். ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.