க்ரைம்

“அடுத்தடுத்து உடைக்கப்பட்ட பூட்டுகள்” - குழந்தைகளுடன் வீட்டிற்கு சென்ற பாட்டி.. சிதறிக்கிடந்த பொருட்கள் நடந்தது என்ன?

குற்றவாளியின் கைரேகை சேகரித்தபோது பட்டப்பகலில் ..

Mahalakshmi Somasundaram

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த முடிச்சூர், அமுதன் நகர் பகுதியில் வசித்து வருபவர் 33 வயதுடைய விமல்ராஜ் இவர் இருங்காட்டு கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். விமல்ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் இவர்களது குழந்தையை அமுதன் நகரில் உள்ள விமல்ராஜின் மாமியார் வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இந்தநிலையில் விமல் ராஜின் மாமியார் மாலை வழக்கம்போல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு விமல்ராஜின் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து இருந்துள்ளது, இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் எல்லாம் கலைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே தனது மருமகனுக்கு போன் செய்து இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விமல்ராஜ் இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் விரைந்து சென்ற குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தபோது இரண்டு சவரன் தங்க நகை ஒரு விலை உயர்ந்த செல்போன் வெள்ளி பொருட்கள் ஒரு லேப்டாப் என கையில் கிடைத்தவை எல்லாம் எடுத்துக்கொண்டு கொள்ளையன் சென்றுள்ளது தெரியவந்தது.

மேலும் அதே பகுதியை சேர்ந்த இந்திரன் என்பவரின் வீட்டில் உடைத்து வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து குற்றவாளியின் கைரேகை சேகரித்தபோது பட்டப்பகலில் மட்டும் ஷேர் ஆட்டோவில் சென்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றும் பழைய குற்றவாளியான கிண்டியைச் சேர்ந்த 42 வயதுடைய அரவிந்த் குமார் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் வீட்டுக்கு சென்றபோது இல்லாததால் தொடர்ந்து தேடி வந்த நிலையில் மீண்டும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற முடிச்சூர் பகுதிக்கு அரவிந்த குமார் வந்த போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவருடன் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற வந்த அவரது கூட்டாளி குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்கிற அண்ணாச்சி (வயது-39) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க நகை வெள்ளி பொருட்கள் ஒரு லேப்டாப் செல்போன் என கொள்ளையடித்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.