தென்காசி மாவட்டம், கரிவலம் வந்த நல்லூர் அருகே மாங்குடி கிராமம் தேவி ஆற்று படுகையில் கிறிஸ்துராஜபுரம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் மரியராஜ் என்பவரின் மனைவி 46 வயதுடைய அமலா புஷ்பம் ஊருக்கு அருகில் உள்ள வயல் பகுதியில் தனியாக தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள் அமலா புஷ்பாவிடம் “வெயில் அதிகமாக இருக்கு அதனால தண்ணி தாகமா இருக்கு குடிக்க தண்ணீர் இருந்த தாங்க” என கேட்டுள்ளனர் உடனடியாக அமலா புஷ்பம் தான் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
தண்ணீரை குடித்த அவர்கள் அமலா புஷ்பாவிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளனர். இதில் காயமடைந்து அவர் மயங்கிய நிலையில் அவரிடம் இருந்த தங்க கம்மல் மற்றும் தாலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். பின்னர் அப்பகுதி வழியே சென்ற மக்கள் அமலா புஷ்பாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு கண் விழித்த புஷ்பா தனது நகைகள் இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் இது பற்றி கரிவலம் வந்து நல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலாயுதபுரம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த டேனியல் பொன்னுத்துரை என்பவரின் மகனான 18 வயதுடைய இமானுவேல் ராஜா மற்றும் பெருமாள்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராசையா என்பவரது 21 வயதுடைய மகன் வெள்ளத்துரை ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் முதல் குற்றவாளி இம்மானுவேல் ராஜன் இறந்துவிட்டார். இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜவேலு முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் நீதிபதி பி ராஜவேலு குற்றவாளி வெள்ளத்துரைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் வாலிபர்கள் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.