தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்துள்ள கட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் 26 வயதுடைய பாலாஜி. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த நிலையில் பாலாஜியை அவரது பெற்றோர்கள் கேரளா கோழிக்கோடு பகுதியில் உள்ள தங்களது உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். அங்கு சென்ற பாலாஜி அருகில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார்.
அப்போது அதே பகுதியில் தனது உறவினர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 13 வயது சிறுமியிடம் பாலாஜி பேசி பழகியுள்ளார். அந்த சிறுமியும் பாலாஜியிடம் பேசி பழகி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த பாலாஜி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது சிறுமி “அண்ணா நீங்க பண்றது புடிக்கல நான் போற” என கூறி அள்ளுது கொண்டே தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
பின்னர் சிறுமி பாலாஜி தன்னிடம் நடந்து கொண்டது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகாரளித்தனர். தன்னை போலீசார் கைது செய்ய வருவதை அறிந்து கொண்ட பாலாஜி கேரளாவில் இருந்து தப்பித்து வந்து தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் தலைமறைவாக வாழ்ந்து வந்திருக்கிறார். மேலும் அவரது செல்போன் அன்னையும் சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்த நிலையில் கேரளா போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாலாஜி தஞ்சாவூரில் பதுக்கி இருப்பதை அறிந்த கேரள போலீசார் தமிழ்நாடு போலீசாரின் உதவியுடன் பாலாஜியை கைது செய்து கேரளாவிற்கு அழைத்து சென்றனர். மேலும் ஏற்கனவே பாலாஜி மீது கொலை, கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தஞ்சாவூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. 13 வயது சிறுமியை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.