க்ரைம்

“காட்டுக்குள் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்” - மனைவியை கொலை செய்து விட்டு கணவன் செய்த அசிங்கம்.. போலீசாரை அதிர வைத்த மர்டர் பிளான்!

மௌனிகாவை நம்பவைத்து, "வெளியே போகலாம் வா" என தர்லபஹாட் காட்டுப்பகுதிக்கு அழைத்துச்...

Mahalakshmi Somasundaram

தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், கானாபூர் நகரில் உள்ள சாந்திநகர் காலனியில் வசித்து வருபவர் அருண். இவருக்கும் 30 வயதுடைய மௌனிகா என்ற பெண்ணுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அருண் விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த (மே 9) ஆம் தேதி தாயார் வீட்டிற்குச் சென்ற தனது மனைவி காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரைப் பெற்ற காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில், தர்லபஹாட் காட்டுப்பகுதியில் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்ற உள்ளூர் மக்கள், நிர்வாண நிலையில் ஒரு பெண்ணின் உடலைக் கண்டதால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், சடலத்தை சோதனை செய்ததில் அது காணாமல் போன மௌனிகா என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே பல்வேறு கோணத்தில் விசாரணை தொடங்கிய போலீசார் முதலில் மௌனிகாவின் கணவர் அருணிடம் விசாரணை மேற்கொண்டனர். அருணின் தொலைபேசி மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அருண் மீதே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரைக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்து தங்களுக்குரிய முறையில் விசாரணை நடத்தியதில் அருண் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

திருமணமான நாளிலிருந்து கணவர் அருண் மற்றும் அவரது குடும்பத்தினர், கூடுதல் வரதட்சணைக்காக மௌனிகாவைத் துன்புறுத்தியதோடு . மட்டுமின்றி, கணவர் அருண் மௌனிகா மீது சந்தேகத்தையும் வளர்த்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மௌனிகாவை கொலை செய்ய திட்டமிட்ட அருண் (மே 9) ஆம் தேதி மனைவி மௌனிகாவை நம்பவைத்து, "வெளியே போகலாம் வா" என தர்லபஹாட் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அங்கே மௌனிகாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து பின்னர், சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, அடையாளம் தெரியாத நபர்கள் மௌனிகா மீது பாலியல் வன்கொடுமை செய்தது போல் அவரது உடைகளை அகற்றி, கொலை செய்து, தங்க நகைகளை எடுத்துச் சென்றது போல சித்தரித்துள்ளார்.

தொடர்ந்து மௌனிகாவின் தங்க நகைகள், செல்போன், பிற பொருட்களை மறைத்து வைத்த பின்னர், தனது மனைவி காணவில்லை என காவல் துறையினரிடம் புகார் அளித்தது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் அருணின் பெற்றோர்களான நல்ல ஸ்ரீநிவாஸ், தெள்ள ஆகியோரையும் கட்டுப்பாட்டிற்குள் எடுத்து, ஐந்து பவுன் தங்க நகைகள், பைக் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனே மனைவியை கொலை செய்து சடலத்தை நிர்வாணமாக்கி நாடகமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.