க்ரைம்

திருமண வாக்குறுதி.. 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்! 5 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி தீர்ப்பு

இதை வீட்டில் சொல்ல கூடாது என்றும் மிரட்டியுள்ளார். மேலும் "இது தவறு இல்லை..

Muthu Lakshmi

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

தேனி மாவட்டத்தில் செல்வம் (வயது 35) என்ற இளைஞர் தேனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். மேலு அவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதை வீட்டில் சொல்ல கூடாது என்றும் மிரட்டியுள்ளார். மேலும் "இது தவறு இல்லை நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்" என்று ஆசை வார்த்தை பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் நடவடிக்கை கவனித்த பெற்றோர், சந்தேகித்து விசாரித்த போது செல்வம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. அதையடுத்து, சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு காரணமான செல்வத்தின் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை அறிக்கை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவுற்று  இளைஞர் செல்வம் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக  குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு திருத்த சட்ட பிரிவு 6ன் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 5000 ரூபாய் அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 366 பிரிவின் கீழ் 10 வருட கடுங்காவல்  காவல் சிறை தண்டனையும், என இரண்டு பிரிவின் கீழ் 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறை தண்டனையை ஏக காலத்திற்கும் அனுபவிக்க வேண்டும் என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

மேலும் சிறுமியின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்விற்காக தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். மேலும் இந்த தீர்ப்பினை தொடர்ந்து  குற்றவாளியை காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.