திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்து திருவெள்ளறையில் அமைந்துள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் நான்காவது திருத்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் 1000 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு சொந்தமாக நந்தவனமும் உள்ளது. இந்த நிலையில் இக்கோவிலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த சுரேஷ் என்பவர் பட்டப் பகலில் கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணுடன் நந்தவனத்தில் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பார்ப்போரை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இந்த வீடியோவால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே இதனை பார்த்த பக்தர்கள் கோவிலில் புனிதம் கெட்டு விட்டதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோவில் நிர்வாகத்திடமும் காவல் துறையினரிடமும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து திருவள்ளரை கோவில் மேற்பார்வையாளர் சுரேஷிடம் கேட்டபோது அவர் “நான் 2016 இல் பணிக்கு சேர்ந்தேன் இதுவரை என் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. 54 வயதாகிறது எனக்கு திருமணம் ஆகவில்லை சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டேன் இதுபோன்று இதுவரை நடந்ததில்லை அதற்காக வருந்துகிறேன்” எனவும் தெரிவித்தார்.
மேலும் "இந்துக்கள் தங்களது நம்பிக்கையாக கோவிலுக்கு வருகிறார்கள் ஆனால் கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் இதுபோன்று பண்ணலாமா உங்களுக்கு தெரிந்த பொண்ணோ, தெரியாத பொண்ணோ இதை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே" என்ற கேள்விக்கு தெரியாமல் செய்துவிட்டேன் என்றும் இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதம் ஆகிறது என தெரிவித்தார்.
மறைவான இடங்களில் அல்லது பூங்காக்களில் பெண்ணிடம் அத்துமீறும் சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் கோவிலில் நந்தவனத்தில் இதுபோன்று நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான இந்துக்கள் பலர், கடவுளின் மீது உள்ள நம்பிக்கையால் கோயிலுக்குள் சென்று வழிபட்டு வரும் நிலையில் கோவிலுக்குள் கோவில் பணியாளர் பெண்ணுடன் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி உள்ள நிலையில், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் அந்த நிர்வாகியை பெயரளவிற்கு இடம் மாற்றம் மட்டும் செய்துள்ளது பக்தர்கள், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 நாட்கள் முன்பு வந்த புகாரை இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அவரது கட்டுப்பாட்டில் திருவள்ளரை மேற்பார்வையாளர் சுரேஷை வைத்திருப்பது அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறாரோ? என்ற சந்தேகத்தை மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.