க்ரைம்

“உயிரோட இருந்ததான கடனை கேப்ப” - 18 லட்சம் கடன் வாங்கிய மனைவி.. திரும்ப கேட்டதால் வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர்!

வழக்கமாக கடனை திருப்பி கேட்க போன் செய்த பிரபாகரனிடம் கடனை திருப்பி செலுத்துவதாக

Mahalakshmi Somasundaram

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் அதே பகுதியில் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவர் பைனான்ஸ் வைத்து நடத்தி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுருளி மணி என்பவரது மனைவி ஜெயபிரியாவிற்கு 18 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளார். வெகு நாட்கள் ஆகியும் கடனை ஜெயப்பிரியா திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால் பிரபாகரன் ஜெயபிரியாவிடம் தொடர்ந்து கடனை திருப்பி செலுத்துமாறு கூறி வந்துள்ளார். இதில் சுருளி மணிக்கும் பிரபாகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, நாளடைவில் இது பகையாக வளர்ந்துள்ளது. இருப்பினும் பிரபாகரன் போன் செய்து கடனை திருப்பி செலுத்துமாறு தெரிவித்து வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுருளி மணி பிரபாகரனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்கு உதவியாக தனது மச்சான் முத்து மற்றும் தனது நபரை கூட்டு சேர்த்துள்ளார்.

பின்னர் வழக்கமாக கடனை திருப்பி கேட்க போன் செய்த பிரபாகரனிடம் கடனை திருப்பி செலுத்துவதாக கூறி கோட்டை பேரூராட்சி பேருந்து நிறுத்தம் அருகே அழைத்துள்ளார். சுருளி சொன்னது போல பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வந்த பிரபாகரனை”உயிரோட இருந்ததான பணத்தை கேப்ப” என கூறி சுருளி அவரது நண்பர் மற்றும் முத்து ராஜா சேர்ந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்க வந்த பொதுமக்களையும் மிரட்டியுள்ளனர்.

பிரபாகரனை தாக்கி விட்டு மூவரும் தப்பித்து சென்ற நிலையில், உயிருக்கு போராடிய பிரபாகரனை பொதுமக்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து விசாரணை தொடங்கிய போலீசார் பிரபாகரனின் கால் ஹிஸ்டரியை வைத்து சுருளி மணியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுருளி நடத்தை வாக்குமூலம் அளித்த நிலையில், சுருளி வாக்குமூலத்தின் அடிப்படையில் முத்து ராஜா மற்றும் சுருளியின் நண்பரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் சுருளியின் மனைவி ஜெயப்பிரியாவிற்கு இந்த கொள்ளையில் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்றும் கடன் பிரச்சனையால் தான் பிரபாகரன் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.