தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள செங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்னன் இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு 27 வயதில் அஜித்குமார் என்ற மகன் இருந்த நிலையில் அவர் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி திரிந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மது பழக்கம் உடைய அவர் சிறிது காலமாக அதற்கு அடிமையாக தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தாய் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். எனவே அபிமன்னன் கூலி தொழில் செய்து குடும்பத்தை கவனித்து வந்திருக்கிறார்.
மேலும் நாளுக்கு நாள் அஜித்குமாரின் அட்டகாசம் அதிகரித்து வந்திருக்கிறார் குடித்துவிட்டு வந்து அக்கம் பக்கத்தினரிடம் சண்டை இழுப்பது, வீட்டில் உள்ள பொருட்களை போட்டு உடைப்பது என அலப்பறை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் தந்தை அபிமன்னன் வேலைக்கு சென்ற பின் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த அஜித்குமார் மது போதையில் பெற்ற தாயிடமே தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த தாய் நடந்த சம்பவம் குறித்து அவரது கணவரிடம் தெரிவித்திருக்கிறார்.
அன்று இரவு வீட்டிற்கு வந்த அஜித்குமாரை தாய் தந்தை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்தும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்திருக்கின்றனர். அஜித்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்ற அக்கம்பக்கத்தினர் அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதனை தொடர்ந்து இக்கொலை சம்பவம் தொடர்பாக வீரபாண்டி காவல் நிலையத்தில் தாய், தந்தை இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று வழக்கு விசாரணை முடிவு பெற்ற மகனை கொலை செய்த குற்றத்திற்காக தாய், தந்தை இருவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மகனை கொன்ற தாய் தந்தைக்கு ஒரு வருடம் கழித்து ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.