Admin
க்ரைம்

“நடுரோட்டில் ஆடைகளை கிழித்து பெண்ணை மிரட்டிய கும்பல்” - பாலியல் புகாரை வாபஸ் வாங்க சொல்லி கொடுத்த டார்ச்சர்!

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து மிமிதாவை அவர்களிடமிருந்து...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், அம்மனம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் மிமிதா, இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் இவரது கணவர் நைஜீரியாவில் பணிபுரிந்து வருகிறார். எனவே மிமிதா தனது குழந்தையுடன் வடக்கை வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். மிமிதாவிற்கு பெரிதும் உறவினர்கள் இல்லை என சொல்லப்படும் நிலையில் இதை அறிந்த பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சரவணன் என்பவர் மிமிதாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

மேலும் வெளியில் செல்லும் போதெல்லாம் தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மிமிதா வீட்டிற்கு சென்ற சரவணன் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது மிமிதாவின் சத்தம் கேட்டு அவரது வீட்டு உரிமையாளர் மேலே சென்று சரவணனை எச்சரித்து அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இருப்பினும் அடங்காத சரவணன் தொடர்ந்து மிமிதவை டார்ச்சர் செய்து வந்திருக்கிறார்.

எனவே மிமிதா சரவணன் மீது புகாரளித்த நிலையில் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் சரவணன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சரவணனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மிமிதா வீட்டிற்கு சென்ற சரவணனின் மனைவி, அக்கா மற்றும் உறவினர்கள் சிலர் மிமிதாவை சரமாரியாக அடித்தும் ரோட்டில் வைத்து அவரது ஆடைகளை கிழித்தும் புகாரை வாபஸ் வாங்க கூறி மிரட்டியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து மிமிதாவை அவர்களிடமிருந்து மீட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மிமிதா தனது வீட்டிற்குள் சென்று தற்கொலைக்கு முயன்ற நிலையில் வாடகை வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மிமிதாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் மிமிதா “ போலீசார் சரவணனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்வதாகவும்” குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நான் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.