தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பாளையத்தை சேர்ந்தவர்கள் செந்தமிழ் மற்றும் சரவணன். அதே பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் செந்தமிழ் என்ற மாணவனும், 22 வயதாகும் லாரி ஓட்டுநர் சரவணனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த இரண்டு பள்ளி சிறுமிகளை காதலித்து வந்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்வதாக சிறுமிகளுக்களிடம் ஆசை வார்த்தை கூறிய செந்தமிழ் மாற்றும் சரவணன் அவர்களிடம் தினமும் இரவில் வீடியோக்கள் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். வீடியோக்கள் பேசும் போது சிறுமிகளை அரைகுறை ஆடைகளுடன் வீடியோ காலில் பேச வற்புறுத்தியுள்ளனர்.
காதலர்கள் தானே நிச்சயம் ஒரு நாள் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என நம்பிய சிறுமிகள் அவர்கள் சொன்னது போலவே வீடியோ காலில் பேசியுள்ளனர். சிறுமிகள் பேசிய வீடியோ கால்களை ஸ்கிரீன் ரெக்கார்ட் மற்றும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்து கொண்ட இளைஞர்கள் அவற்றை பார்த்து இச்சையை தீர்த்துக் கொண்டுள்ளனர். மேலும் தங்களது நண்பரான பெத்தானூரை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் என்பவருக்கு அந்த வீடியோவையும், புகைப்படங்களும் அனுப்பி வைத்துள்ளனர்.
செந்தமிழ் மற்றும் சரவண அனுப்பிய சிறுமிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெங்கடேசன் ஊர் இளைஞர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த அந்த குழுவில் இருந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமிகளின் பெற்றோர்களிடம் இதை பற்றி கூறியுள்ளனர். மகள்களின் அந்தரங்க புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமிகளிடம் விசாரித்துள்ளனர்.
பின்னர் நடந்த அனைத்தையும் சிறுமிகள் அவர்களின் பெற்றோரிடம் கூறிய நிலையில் சிறுமிகள் அழைத்து கொண்டு காவல் நிலையத்திற்கு பெற்றோர்கள் சரவணன் மற்றும் செந்தமிழ் மீது புகாரளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார் இவர்கள் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் வெங்கடேசனை கைது செய்துள்ளனர்.
மூவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வேறு யாராவது இந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் சேமித்து வைத்துள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.17 வயது சிறுமிகள் இவ்வாறு பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.