
கன்னியாகுமரி மாவட்டம் தடிகாரகோணம் பகுதியை சேர்ந்தவர் வினு. இவர் இந்திராநகர் பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். காலை முதல் மதியம் வரை கடையில் இருக்கும் வினு தினமும் 2 மணி போல வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு கடைக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். வினு வீட்டிற்கு செல்லும் நேரத்தில் அவரது மனைவி கடையை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அதே இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் 39 வயதான விஜய். கூலி தொழிலாளியான இவர் அடிக்கடி வினுவின் கடைக்கு சென்று டீ குடிப்பதை பழக்கமாக வைத்திருந்துள்ளார். அவ்வாறு செல்லும் போது வினு இல்லாமல் அவரது மனைவி மட்டும் கடையில் இருந்தால் அவரிடம் இரட்டை அர்த்தம் தரும் வார்த்தைகளை பேசுவது பாலியல் சைகைகளை காட்டுவது என்று தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இதை பற்றி வினுவின் மனைவி வினுவிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த வினு விஜய் இதே பகுதியை சேர்ந்தவர் பின்னாளில் அவரது முகத்தை பார்க்க வேண்டும் என விஜயை தனியாக அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார். ஆனாலும் விஜய் தனது நடத்தைகளை மாற்றி கொள்ளாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கடைக்கு வந்த விஜய் கடையில் வினுவின் மனைவி தனியாக இருப்பதாக நினைத்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட சென்றுள்ளார்.
கடையின் பின்பக்கம் இருந்த வினு இதனை கவனித்து விஜயிடம் கோபமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் கடையில் வடை போட கொதிக்க வைத்திருந்த எண்ணையை எடுத்து வினு மற்றும் அவரது மனைவியின் மீது ஊற்றிவிட்டு விஜய் தப்பி சென்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வினு மற்றும் அவரது மனைவியை மீட்டு மருத்துவனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு தப்பி சென்ற விஜயை தேடி வந்தனர். காட்டில் பதுங்கியிருந்த விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.