திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஆலிவட்டம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு கோவிந்தசாமி மற்றும் 48 வயதுடைய சௌந்தர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பெருமாளுக்கு அவரது சொந்த ஊரில் 75 சென்ட் நிலம் உள்ளது இந்த நிலத்தில் கோவிந்தராஜ் மற்றும் சௌந்தர் ஆகிய இருவருக்கும் பங்கு உள்ள நிலையில் சொத்து பிரிக்கப்படும் இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பொது சொத்தில் உள்ள கிணற்றில் பைப் அமைத்து கொள்வதாக சௌந்தர் கோவிந்தராஜனின் மகனான 28 வயதுடைய திருமால் என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு திருமால் இன்னும் சொத்து பிரிக்கவில்லை சொத்து பிரிக்கும் வரை அதில் பைப் அமைக்க கூடாது சொத்து பிரித்த பிறகு நீங்கள் பைப் அமைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
இதனால் திருமால் மீது ஆத்திரத்தில் இருந்த சௌந்தர் குடித்துவிட்டு அவரது வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் சௌந்தர் திருமால் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கத்தியால் தாக்கியுள்ளார் எனவே திருமால் தன்னை காப்பற்றிக்கொள்ள எண்ணி அப்பகுதியில் தப்பித்து சென்றதாக சொல்லப்படுகிறது.
அதன் பின்னர் வீட்டில் இருந்த இருந்த திருமாலின் மனைவியான 25 வயதுடைய இந்து மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். மேலும் இந்துவின் கழுத்தில் கத்தியை வைத்து “இப்போதே உன் புருஷனை இங்கு வர சொல்லி இல்லை உன் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சௌந்தர் கையில் இருந்த கத்தியை நேர்த்தியாக பறித்து அவரை தடுத்துள்ளனர்.
இதையடுத்து மது போதையில் இருந்த சௌந்தர் மயக்கமடைந்த நிலையில் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்து நிலையில் மேல்சிகிச்சைக்காக சௌந்தரை இன்று காலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சொத்துக்காக அண்ணன் மருமகள் கழுத்தில் கத்தியை வைத்து தீர்த்து கட்டி விடுவேன் என சின்னமாமனார் மது போதையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.