Husband Obscene Chatting Allegation 
க்ரைம்

“கணவர் போனில் கொட்டிக்கிடந்த ஆபாச மெசேஜ்கள்” - பார்க்க கூடாததை பார்த்த மனைவி உயிரிழப்பு.. கொலை என குற்றம் சாட்டும் உறவினர்கள்!

பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியப் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது மகள் 25 வயதுடைய கிருத்திகா. இவருக்கும், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன வெங்காயப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சென்ராயன் என்பவரது மகனான 33 வயதுடைய அமித்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அமித்குமார் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு ஆபாச மெசேஜ் செய்து வந்திருக்கிறார். மேலும் இது யாருக்கும் தெரியாமல் இருக்க பெண்களின் பெயரை மொபைல் போனில் மாற்றி மாற்றி ஆண்களின் பெயரில் பதிவு செய்து செய்து வைத்திருந்திருக்கிறார்.

இதனை கவனித்த வந்த கிருத்திகா, கணவர் இல்லாதபோது அவரது போனை எடுத்து பார்த்த போது அவர் பல பெண்களுடன் மிகவும் ஆபாசமாக மெசேஜ் செய்து வந்ததும். அவ்வப்போது அவர்களுடன் நிர்வாண வீடியோ கால் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து கிருத்திகா கேட்டதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று(செப் 29) மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கிருத்திகா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருத்திகாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, கிருத்திகாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பிரேதப் பரிசோதனை அறை முன்பு திரண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். அப்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் நல்லசிவனின் காரை முற்றுகையிட்ட அவர்கள், கிருத்திகாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், தனது மகளை “எங்க அவன் பண்ணது வெளில தெரிஞ்சிடுமோனு.. அவன் தான் அடிச்சு கொன்னுட்டான்” என கிருத்திகாவின் கணவர் மீது குற்றசாட்டு வைத்திருக்கின்றனர். மேலும், கிருத்திகாவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் மற்றும் சம்பந்தி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய குடும்பத்தினர், ஆட்சியரின் காரின் முன்பு கையெடுத்து கும்பிட்டு, தரையில் படுத்து கதறி அழுதனர்.

இதையடுத்து, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கிருத்திகாவின் குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன நிலையில் கிருத்திகா உயிரிழந்துள்ளதால், இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. கணவர் வேறொரு பெண்ணுடன் ஆபாசமாக சாட்டிங் செய்து வந்ததாக கூறப்படும் நிலையில், ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்