க்ரைம்

“சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணவர்” - வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல்.. சிறுமிக்கு சூடு வைத்த மனைவி மற்றும் தாய்!

கார்த்திக்கும் வேலைக்கு சென்று விடுவதால் கார்த்திக்கின் மகள் மற்றும் மகன் பள்ளி முடித்து வந்து மாலை வேளையில் வீட்டின் அருகில் இருக்கும் தியாகு என்பவரது

Mahalakshmi Somasundaram

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருபவர் கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு அதே பகுதியி சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி 8 வயதில் ஒரு மகளும் 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு கருது வேறுபாடு காரணமாக கார்த்திக்கின் மனைவி குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருகிறார். எனவே கார்த்திக் தனது மகள் மற்றும் மகனை அவருடைய பெற்றோர் உதவியுடன் வளர்த்து வருகிறார்.

கார்த்திக்கின் மகள் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தினசரி காலையில் கார்த்திக்கின் தாய் தினமும் காலையில் சமையல் செய்து வைத்து விட்டு காங்கேயத்தில் உள்ள பூக்கடையில் வேலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். கார்த்திக்கும் வேலைக்கு சென்று விடுவதால் கார்த்திக்கின் மகள் மற்றும் மகன் பள்ளி முடித்து வந்து மாலை வேளையில் வீட்டின் அருகில் இருக்கும் தியாகு என்பவரது வீட்டில் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வரும் கார்த்திக்கும் அவரது தாயாரும் பின்னர் பிள்ளைகளை அழைத்து அந்த கவனித்துக் கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் கார்த்திக்கின் “மகன் அக்காவுக்கு கையில் தீக்காயம் இருக்கு அதான் அக்கா குளிக்க மாட்டேங்குறாங்க” என்று கூறியுள்ளான். உடனே கார்த்திக் தனது மகளின் இடது கையில் தீக்காயம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் என்ன நடந்தது என்று தனது மகளிடம் கேட்ட போது “பக்கத்து வீட்டு ரஞ்சிதா அக்கா ஜெயந்தி ஆத்தா சூடு வச்சுட்டாங்கன்னு” கூறியுள்ளார்.

பின்னர் கார்த்திக் தனது மகளிடம் எதனால் சூடு வச்சாங்க என்ன நடந்தது என்று கேட்ட போது “ஊர் கோயில் விசேஷத்தின் போது நானும், தம்பியும் மட்டும் வீட்டில் இருந்தோம் அப்போது தம்பி மதியம் சாப்பிட்டு விட்டு தூங்கிட்டான், நான் மட்டுமே முழித்திருந்தேன் அப்போ பக்கத்து வீட்டில் இருக்கும் தியாகு மாமா நம்ம வீட்டுக்கு வந்து கட்டிங் பிளேடு கேட்டாங்க, நான் வெளியில் வந்து எங்க ஆத்தா வெளியில போயிருக்காங்க அவங்களுக்கு தான் தெரியும். எனக்கு எங்க இருக்குன்னு தெரியாதுன்னு சொன்னேன்.

அப்போது தியாகு மாமா என் கையை பிடிச்சு நம்ம வீட்டுக்குள்ள இழுத்துட்டு போய் என்னிடம் ஒரு மாறிய நடந்துகிட்டாங்க நான் பயந்து வெளியே ஓடிட்டேன், அப்புறம் நான் மாமா வீட்டுக்கு போய் ஜெயந்தி ஆத்தா கிட்டயும், ரஞ்சிதா அக்கா கிட்டயும் மாமா செய்ததை சொன்ன அவங்க ரெண்டு பேரும் இதை வெளியில யார்கிட்டயும் சொல்லாத அப்படி சொன்னா உங்க அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பிடுவோம் என்று சொன்னாங்க அதனால பயந்துகிட்டு நான் யார்கிட்டயும் சொல்லல.

அப்ப இருந்து அவங்க ரெண்டு பேரும் என்னை பார்க்கும்போதெல்லாம் மாமா பண்ணது யார்கிட்டயும் சொன்னியானு கேட்டு மிரட்டிடே இருந்தாங்க. அதுக்கு நான் என் அப்பா கிட்ட சொல்லுவேன் என்று சொன்னதுக்கு நேற்று இரவு ரஞ்சிதா அக்காவும் மற்றும் ஜெயந்தி ஆத்தாவும் சூடு வச்சிட்டாங்க” என கூறியுள்ளார். இதனை கேட்ட தந்தை கார்த்திக் தியாகு மீதும் ரஞ்சிதா மற்றும் ஜெயந்தி ஆகிய இருவரும் சேர்ந்து எனது குழந்தைக்கு சூடுவைத்து சித்திரவதை செய்ததாக கூறி காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளர்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்துறையினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தியாகு அவனுக்கு உடந்தையாக செயல்பட்ட மனைவி ரஞ்சிதா, தாய் ஜெயந்தி ஆகியோரை கைது செய்துள்ளனர். சிறுமிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை மனைவி மற்றும் தாய் கண்டிப்பதை விட்டுவிட்டு சிறுமியை மிரட்டி சூடுவைத்து சித்திரவதை ஈடுபட்டதில் இரு பெண்களே ஈடுபட்டது காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.