திருத்தணி ஆகூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவர் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த தனது நண்பரான அருணுக்கு தனது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும். தனக்கு சொந்தமான காலி நிலத்தை மாட்டு இறைச்சி விற்க வாடகைக்கு அளித்துள்ளார். அங்கு கடை வைத்த அருணுக்கு வியாபாரம் நன்றாக நடந்து வந்துள்ளது.
இதே சமயம் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞரின் இறைச்சி கடையில் வியாபாரம் குறைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா அருணின் கடைக்கு சென்று பிரச்சனை செய்துள்ளார். இதனை தடுக்க வந்த வேலாயுதத் திடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மூவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றவே இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத சூர்யா தனது அண்ணனுடன் நேற்று இரவு மது அருந்து விட்டு வேலாயுதத்தை கொலை செய்யும் நோக்கில் அவரது நண்பர்களுடன் வேலாயுதம் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வேலாயுதம் தனது மாமா வீட்டிற்கு சென்றதை அறிந்த அந்த கும்பல் வேலாயுதத்தை தேடி அங்கு சென்றுள்ளனர்.
வீட்டிற்கு சென்ற அந்த கும்பல் ஒன்றாக அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த, வேலாயுதம், வேலாயுதத்தின் மாமா ரவி மற்றும் அவரது மனைவி ஆகிய மூன்று பேரிடமும் போதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் தகராறு செய்துள்ளனர். வேலாயுதத்தை மறைத்து வைத்திருந்த கத்தியால் சூர்யாவின் அண்ணன் அப்பு தக்க முயற்சித்தபோது ரவி தடுத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அப்பு ரவியை தலை மற்றும் தோல் பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். ரவி மற்றும் அவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசிற்கு தகவலாளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இறைச்சி கடை தகராறில் மனைவியின் கண் முன்னே கணவன் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்