க்ரைம்

வீடு புகுந்து கொள்ளை! மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி: டூவிபுரம் 5வது தெருவில் வசித்து வருபவர்கள் பிச்சையா மகன் சித்திரைவேல் – கல்பனா தம்பதியினர். இவர்கள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே பூக்கடை நடத்தி வருகின்றனர். நேற்றுமதியம் 2 மணியளவில் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு பூக்கடைக்கு சென்றுள்ளனர்.

மீண்டும் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது கதவின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோலாக்கர் திறக்கப்பட்டு, அதிலிருந்த 20 பவுன் தங்கநகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுத் தொடர்பாக, மத்திய பாகம் காவல் நிலையத்தில் சித்திரைவேல் புகார் செய்தார். புகாரை அடுத்து ஆய்வாளர் ஐயப்பன், உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிலுள்ள தடயங்களை சேகரித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.