தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த காலன் என்பவரின் மகன் 33 வயதுடைய பெரியநாயகம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. பெரியநாயகம் நேற்று அவரது உறவினரான கவர்ணகிரியைச் சேர்ந்த செந்தூர்க்கனி என்பவரது இல்ல காதணி விழா நிகழ்ச்சிக்காக இருக்கன்குடி சென்றுள்ளார். அப்போது அங்கு தனது உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்திய நிலையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்லாமல் காரிலேயே இருந்ததாகக் சொல்லப்படுகிறது.
எனவே அவரது உறவினர்கள் நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில் அவரது உறவினர்கள் அவருக்கென ஒரு தனி தட்டில் உணவு எடுத்துச் சென்று அவரை உணவருந்த வைத்திருக்கிறார். இதனைப் பார்த்த அங்கு ஏற்கனவே காத்திருந்த உறவினர் முனியசாமி என்பவர் உட்பட சிலர் "நாங்கள் மட்டும் காத்துக் கொண்டிருக்க வேண்டும். அவருக்கு மட்டும் என்ன தனியா சாப்பாடு.." எனக்கூறி காதணி விழா நிகழ்ச்சியில் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். இதனை பார்த்த மற்ற உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்து வீட்டிற்கு அனுப்பி இருக்கின்றனர்.
தகராறு காரணமாக பெரியநாயகம் மற்றும் அவருடன் வந்த சில உறவினர்கள் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அனைவரும் ஊருக்கு புறப்பட்டுள்ளனர். செல்லும் வழியில் எட்டயபுரம் அருகே கீழ ஈராலில் உள்ள டீக்கடை ஒன்றில் அனைவரும் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, நிகழ்ச்சியில் பிரச்சனையில் ஈடுபட்ட முனியசாமி மற்றும் அவரது உறவினர் ஒருவர் என இருவரும் சேர்ந்து குடிபோதையில் வாகனத்தில் இருந்த பெரியநாயகத்தை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் உயிரிழந்த பெரிய நாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலைக்கான முழு கரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற முனுசாமி மற்றும் அவரது உறவினரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.