க்ரைம்

“தலையை வெட்டிக் கொன்னுடுவேன்” - கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்ட செயலாளர்… வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!

கட்சி நிர்வாகி அலெக்சின் கால்களை வெட்டுவேன் என்றும் நிர்வாகியை கீழே தள்ளிவிட்டு...

மாலை முரசு செய்தி குழு

தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன், தனது கட்சி நிர்வாகிகளை ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது. நாகப்பட்டினத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகை தந்திருந்தார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கான செலவு கணக்குகளை மாவட்ட செயலாளர் சுகுமாரன் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளிடம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் திருமருகல் ஒன்றிய கட்சி நிர்வாகிகளுக்கும் மாவட்ட செயலாளர் சுகுமாரனுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறபடுகிறது.

இதனிடையே கட்சி நிர்வாகிகள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரை நேரில் சந்திக்க நாகப்பட்டினம் சென்றுள்ளனர். அப்போது தன் கட்சி நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் சுகுமாரன் மற்றும் அவரது மகன் ரொனால்டோ உள்ளிட்டோர் வெளிப்படையாகவும் கடுமையாகவும் மிரட்டியுள்ளனர்.

"பொதுசெயலாளரிடம் புகார் செய்தால் கொலை செய்து தலையை வெட்டி மூளையை ரோட்டில் வீசுவேன் என்றும், 2000 பேருடன் ஊருக்குள் நுழைந்து உங்கள் கால்களை வெட்டி கொலை செய்வேன் என்றும் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தேர்தல் முடிந்து "கட்சி நிர்வாகி அலெக்சின் கால்களை வெட்டுவேன் என்றும்" நிர்வாகியை கீழே தள்ளிவிட்டு தாக்கிய காட்சிகளும் வெளியாகியுள்ளது. மேலும் "எனக்கு இந்த பதவி இதெல்லாம் ஒன்றும் இல்லை" என்றும் ஒருமையிலும், தகாத வார்த்தைகளிலும் கடுமையாக பேசி தாக்கியுள்ளார்.

மாவட்ட செயலாளர் சுகுமாரின் மகன் ரொனால்டோ "தந்தைக்கு ஒன்று என்றால் சும்மா இருக்க மாட்டேன் எனவும், அனைவரையும் கொலை செய்து கல்லை கட்டி கடலில் இறக்கி விடுவேன்" என்றும் மிரட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட செயலாளரின் கொலை மிரட்டல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே திருமருகல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் கொடுத்த புகாரில் தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கொலை மிரட்டலில் ஈடுபட்ட அவரது மகன் ரொனால்டோ மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த கொலைமிரட்டல் வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திள்ளதுள்ள நிலையில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிழ்வை குறித்து தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் சார்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் சுட்டிக்காட்டி சமூகவலைத்தளத்தில் பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.