திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கர்ப்பிணி பெண்ணிடம் ஆபாசமாக பேசி, பாலியல் இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படும் இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற கர்ப்பிணி பெண்ணிடம் தகாத வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தனியாக சென்று வந்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிடம், ‘வா போகலாம்” என டபுள் மீனிங்கில் பேசியுள்ளார். மேலும் அந்த பகுதி பெண்கள் இயற்கை உபாதை கழிக்க சொல்லும் இடத்திற்கு சென்று அவர்களிடம் தவறாக நடந்து கொள்வதும், ஆடைகளை கழட்டி அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவதுமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் செய்வதறியறியாது கற்களை கொண்டு அவரை தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்து ஓடி சென்று வீட்டில் இருந்த தனது கணவரிடம் இது குறித்து கூறி அழுதுள்ளார். அந்த பெண்ணின் கணவர் மற்றும் அப்பகுதி மக்கள் அவனை தேடி பிடித்து அடித்துள்ளனர்.
அதையடுத்து கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கடந்த ஓராண்டாக பெண்களிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தனர். மேலும், கைது செய்யப்பட்ட யோகேஸ்வரன் என்ற இளைஞர் தமிழக வெற்றி கழக கட்சியை சேர்ந்தவர் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், அதுகுறித்து சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
தமிழகத்தில் தொடர் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட செய்தி பெரும் அதிர்ச்சியையும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.