க்ரைம்

“17 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை” - கடைக்கு வந்த சிறுமியை கர்ப்பமாக்கிய 54 வயது முதியவர்.. போக்சோவில் கைது செய்த போலீசார்!

அதே ஊரில் அவரது உறவினர் ஒருவரின் பெட்டிக்கடையில் உறவினருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்..

Mahalakshmi Somasundaram

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி வளத்தூர் அம்பேத்கர் நகர் கிராமத்தை சேர்ந்தவர் 54 வயதான கஜேந்திரன். இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் உள்ள நிலையில் மூவரும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கஜேந்திரன் வேலைக்கு சென்று விட்டு வந்து வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் அதே ஊரில் அவரது உறவினர் ஒருவரின் பெட்டிக்கடையில் உறவினருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.

அப்போது கஜேந்திரன் இருக்கும் கடையில் இருக்கும் போது கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி கஜேந்திரன் சிறுமியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென சிறுமி சில நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் கடுமையாக வயிறு வலிக்கிறது என கூறவே பயந்த பெற்றோர்கள் சிறுமியை அருகில் இருந்த குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவர்கள் இது குறித்து மருத்துவர்கள் மேல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் மருத்துவர்களிடம் நடந்ததை கேட்டறிந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 10 வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த சிறுமியிடம் கஜேந்திரன் ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் கஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி 54 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்ததும், அதனால் சிறுமி 8 மாதங்கள் கர்ப்பமாக இருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கஜேந்திரன் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.