sabina and suresh  
க்ரைம்

“மரணத்தில் முடிந்த கள்ளக்காதல்” - இரவோடு இரவாக தற்கொலை செய்த காதலன்! போன் எடுக்காததால்..

இருவருக்கும் குழந்தை இல்லாததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது

Mahalakshmi Somasundaram

வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் சிராஜுதீன் மற்றும் ஆஜிரா தம்பதியினர். இவர்களுக்கு 35 வயதில் சபீனாபானு என்ற மகள் உள்ளார். சபீனா பானுவிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மதீனா நகரை சேர்ந்த சான்பாஷா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

மூன்று ஆண்டுகள் சான்பாஷாவுடன்  சபீனா வாழ்ந்த நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லாததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து சபீனா பானு தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து வாழ தொடங்கியுள்ளார்.

எனவே தனக்கு மற்றும் குடும்பத்திற்கு வரும் செலவுகளை பார்த்துக்கொள்ள சதுப்பேரியில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு வேலை செய்து வந்த விருபாட்சிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த 35 வயதாகும் சுரேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

சபீனா பானுவும் சுரேஷும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுரேஷ் வெளிவிட்டு நின்றுள்ளார். பின்னர் இருவரும் தொடர்ந்து போனில் பேசிக் கொண்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சபீனா பானு போன் செய்யாமல் இருந்ததோடு சுரேஷ் போன் செய்தாலும் எடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால் கோபத்தில் இருந்த சுரேஷ் நேற்று இரவு 11 மணியளவில் சபீனாவிற்கு மீண்டும் போன் செய்துள்ளார். அப்போதும் சபீனா எடுக்காததால் நேரடியாக சுரேஷ் இரவு (11.30) மணியளவில் சபீனாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சபின்வேறு இது குறித்து கேட்டதற்கு சபீனா “எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம் இப்போ எதுவும் பேசாம வீட்டுக்கு போ” என கூறியுள்ளார்.

அப்போது சுரேஷ் தனது வண்டியில் இருந்த இரும்பு ராடை பயன்படுத்து சபீனாவை தக்க முயற்சித்துள்ளார். இதை பார்த்து தடுக்க வந்த சபீனாவின் பெற்றோர்களையும் தாக்கியுள்ளார் இதில் சபீனாவின் பெற்றோர்கள் சம்பவ இடத்தில் மயக்கம் அடைத்து விழுந்ததை அடுத்து சபீனாவின் முகத்தை இரும்பு ராட்  பயன்படுத்து சரமாரியாக தாக்கிய சுரேஷ் அவ்விடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார்.

சம்பவ இடத்திலே சபீனா உயிரிழந்தததை அடுத்து அக்கம் பக்கத்தினர் சபீனாவின் பெற்றோர்களை மீது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சபீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சபீனாவை கொலை செய்துவிட்டு தனது வீட்டிற்கு சென்ற சுரேஷ் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  தகவலறிந்து அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரது உடலையும் மீட்டு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்