வேலூர் மாவட்டம், வேலூர் அருகே உள்ள பொய்கை பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய பள்ளி சிறுமி இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சிறுமிக்கு சில நாட்களாக உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு அருகில் இருந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் மாணவி மயங்கி கீழே விழுந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இது குறித்து மருத்துவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவலின் பேரில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் பெற்றோரின் முன்னிலையில் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். முதலில் அச்சத்தில் இருந்த சிறுமி தனக்கு எதுவும் தெரியாது என கூறி அழுதிருக்கிறார். பின்னர் போலீசார் சிறுமியிடம் தொடர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. சிறுமியின் தந்தைக்கு உறவு முறை தம்பியான அதே பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ரமேஷ் என்பவர் சிறுமியின் வீட்டிற்கு உறவினர் என்பதால் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார்.
மேலும் சிறுமியின் தாய் தந்தை இருவரும் கூலி தொழிலுக்கு செல்லும் நிலையில் பள்ளி விடுமுறையின் போது சிறுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது வழக்கம் போல வீட்டுக்கு வந்த ரமேஷ் மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டிருக்கிறார். பின்னர் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி வைத்திருக்கிறார். இதனால் அச்சமடைந்த மானவை இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரமேஷ் அவ்வப்போது மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ரமேஷ் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் மாணவி கர்ப்பமடைந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரமேஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் 2 லட்சம் அபராதம் கட்ட சொல்லியும் தீர்ப்பளித்துள்ளது. மகள் போன்ற பார்க்க வேண்டிய சிறுமியை சித்தப்பா தொடர்ந்து இரண்டு வருடங்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.