“சொந்த மகளுக்கு செய்வினை வைத்த தாய்!” - முகத்தில் இருந்த காயம்.. இரவில் நடந்த கொடூர கொலை.. கைதான தம்பதிகளின் மர்ம பின்னணி!

காயம் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர்...
“சொந்த மகளுக்கு செய்வினை வைத்த தாய்!” - முகத்தில் இருந்த காயம்..  இரவில் நடந்த கொடூர கொலை.. கைதான தம்பதிகளின் மர்ம பின்னணி!
Published on
Updated on
2 min read

கர்நாடக மாநிலம், துமகுரு நகரின் ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வந்தவர் புஷ்பலதா. இவருக்கு சுசித்ரா என்ற மகள் உள்ள நிலையில் அவ்ருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள சுரேஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். சுசித்ரா தனது கணவருடன் அவரது வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் அவரது தந்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நல குறைபாட்டால் உயிரிழந்திருக்கிறார். எனவே புஷ்பலதா தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் மகளுடன் சேர்ந்து அவரது வீட்டில் தங்கி வாழ்ந்து வந்திருக்கிறார்.

குடும்பத்தில் தொடர்ந்து வறுமை இருந்து வந்த நிலையில் இது குறித்து தீர்வு காண சுசித்ரா மற்றும் அவரது கணவர் சுரேஷ் அருகில் உள்ள ஜோதிடரிடம் பலன் கேட்க சென்றிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த ஜோதிடர் சுசித்ராவின் தந்தை இறந்ததற்கு அவரது தாய் புஷ்பலதா செய்த செய்வினை தான் காரணம் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் சுசித்ராவையும் கொலை செய்ய செய்வினை செய்து வைத்திருக்கிறார் என்று கூறிய நிலையில் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுசித்ரா மற்றும் அவரது கணவர் சுரேஷ் இருவரும் சேர்ந்து புஷ்பலதாவை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கின்றனர்.

அதன்படி கடந்த (பிப் 11) ஆம் தேதி இரவு சுரேஷை வெளியூருக்கு அனுப்பிய சுசித்ரா வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்த தாய் புஷ்பலதா முகத்தை தலையணையால் அழுத்தியும் சரமாரியாக தாக்கியும் கொலை செய்திருக்கிறார். பின்னர் தாய் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி உறவினர்கள் தகவல் தெரிவித்து இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். புஷ்பலதா உடம்பில் காயம் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புஷ்பலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் சுசித்ராவிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் “தாய் செய்வினை வைத்து தந்தையை கொன்று விட்டதாகவும், தண்னி கொலை செய்யவும் செய்வினை வைத்ததாகவும் அதனால் கொலை செய்துவிட்டேன்” என தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் அளித்த வாக்குமூலத்தின் படி அவரது கணவர் சுரேஷையும் கைது செய்திருக்கின்றனர்.

மேலும் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சுசித்ரா சொத்துக்களை விற்று தனது வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்த நிலையில் அந்த பணத்திற்காக கூட இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து கொலைக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற மகளே கணவரின் உதவியுடன் தாயை கொன்று மாரடைப்பு நாடகம் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com