விழுப்புரம் மாவட்டம் கண்ணாரம்பட்டு பகுதியை சேர்ந்த சந்தோஷ் விஜயலக்ஷ்மி தம்பதியரின் 19 வயதான மகன் ஆகாஷ் அதே பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் அதே கல்லூரியில் ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கும் தங்கவேல் மற்றும் அஞ்சலை தம்பதியின் மகளான அபிநயாவை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் ஒரே பகுதியில் அடுத்தடுத்த தெருவில் வசித்து வந்த நிலையில் சில வருடங்களாகவே இவர்கள் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாம் ஆண்டின் கடைசி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை வந்துள்ளது. ஒரு மாதம் விடுமுறை என்பதால் சென்னை சென்று வேலை செய்கிறோம் என சொல்லிவிட்டு இருவரும் வீட்டில் இருந்து ஒன்றாக சென்னை வந்துள்ளனர்.
சென்னையில் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த ஆகாஷின் அண்ணன் ஹரிதாஸ் என்பவர் இருவருக்கும் வீடு பார்த்து கொடுத்துள்ளார். சென்னை பெரம்பூரில் வாடகைக்கு வீடு பார்த்து கணவன் மனைவி என சொல்லு ஆகாஷும் அபிநயாவும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆகாஷ் அபிநயாவை கொலை செய்து விட்டு தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். பக்கத்துக்கு வீட்டுக்காரர் நேற்று இரவு வெளியில் சென்ற போது ஆகாஷின் வீட்டு ஜன்னல் திறக்கப்பட்டிருந்த நிலையில் அந்த ஜன்னல் வழியாக தூக்கில் தொங்கிய ஆகாஷின் கால் தெரிந்துள்ளது.
பின்னர் ஜன்னலின் அருகில் சென்று பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் இது குறித்து போலீசில் தகவளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உட்பக்கமாக தாளிடப்பட்டு இருந்த கதவை உடைத்து தரையில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த அபிநயாவின் உடலையும் தூக்கில் தொங்கி உயிரிழந்த ஆகாஷின் உடலையும் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இருவரது பெற்றோரையும் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் வேறேதும் நடந்துள்ளதா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாடகைக்கு வந்த இளம் ஜோடிகள் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்