க்ரைம்

“இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்த 12 வகுப்பு மாணவி” - பலமுறை நடந்த பாலியல் வன்கொடுமை.. உறவினர் வீட்டில் மலர்ந்த காதல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி வீட்டில் இருந்தபோது திடீரென மயக்கம் போட்டு கீழே...

Mahalakshmi Somasundaram

புதுச்சேரி மாவட்டம், புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கு மாணவி. இவர் கடந்த கோடை விடுமுறையின் போது விழுப்புரத்தில் உள்ள வானுார் அடுத்த பெரம்பை கிராமத்தில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த சத்தியசீலன் என்பவற்றின் மகனான 20 வயதான சாரதி என்பவருடன் பழக்க ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்த நிலையில் சாரதி சிறுமியை காதலிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

முதலில் சிறுமி கபாலத்தை மறுத்து நிலையில் சிறுமியிடம் சாரதி ஆசை வார்த்தைகளை கூறி சம்மதிக்க வைத்துள்ளார். பின்னர் சிறுமி விடுமுறை முடிந்து புதுச்சேரிக்கு சென்ற நிலையில் புதுச்சேரிக்கு சிறுமியை பார்க்க சென்ற சாரதி அவருடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். மேலும் அடிக்கடி வெளியில் அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி வீட்டில் இருந்தபோது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை அருகில் இருந்த புதுச்சேரி ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியிடம் அவரது பெற்றோர் மற்றும் மருத்துவர் இது குறித்து விசாரித்த போது, சாரதி தன்னை வெளியில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் சம்பவம் நடந்த இடம் கோட்டக்குப்பம் என்பதால் கோட்டக்குப்பம் போலீஸ் இடம் தகவல் தெரிவித்தனர் . இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அள்ளித்ததன் பேரில் போலீசார் சாரதி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.