viral classroom video 
க்ரைம்

மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர்! 'ஸ்பெஷல் கிளாஸ்' என்று கூறி தனியறையில் வைத்து செய்த செயல் - வைரலான வீடியோ

ஆசிரியர் மாணவியை முத்தமிட்டபடி இருந்துள்ளார். அந்த சமயத்தில் அந்த மாணவியின் சகோதரர் அவரது நண்பர்களுடன் அந்த பயிற்சி மையத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

Vinvizhi Leninton

கோரக்பூரின் கேம்பியர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கணினி பயிற்சி மையத்தில், ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொள்வது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த மையம் தற்போது விசாரணைக்கு உள்ளாகியுள்ளது. ஜகதீஷ் சௌராசியா என அடையாளம் காணப்பட்ட, குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்து, மாணவியின் புகாரின் அடிப்படையில் சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 9, புதன்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த கணினி மையத்தில் சுமார் 40 மாணவர்கள் படித்து வருகிறார்கள். புகாரின்படியும், காவல்துறைக்குக் கிடைத்த தகவல்களின்படியும், கூடுதல் வகுப்பு என்ற பெயரில் வழக்கமான வகுப்பு முடிந்த பிறகு அந்த மாணவியை கூடுதல் நேரம் இறுமாறு ஆசிரியர் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது அந்த ஆசிரியர் மாணவியை முத்தமிட்டபடி இருந்துள்ளார். அந்த சமயத்தில் அந்த மாணவியின் சகோதரர் அவரது நண்பர்களுடன் அந்த பயிற்சி மையத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. வகுப்பறைக்குள் வந்த அந்த சிறுமியின் சகோதரர் ஆசிரியரை தாக்கியுள்ளார். மேலும், வகுப்பு முடிந்த பிறகும் மாணவனை ஏன் மையத்திற்குள் வைத்திருந்தார்கள் என்று அவர் ஆசிரியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மோதலின் போது பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியானது. இதுகுறித்து, அந்த ஆசிரியரிடம் கேட்டதற்கு, “அவள் என் சகோதரி போன்றவள். ரக்ஷா பந்தன் அன்று அவளும் எனக்கு ராக்கி கட்டினாள். அவள் எக்ஸ்ட்ரா கிளாஸ்-காக தங்கியிருந்தாள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் குறித்து மாணவர் தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஜகதீஷ் சௌராசியா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், விசாரணையின் ஒரு பகுதியாக, காவல்துறையினர் அந்த வீடியோவை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.