“மனைவிக்கு போதை மருந்து கொடுத்து..” - பல ஆண்களுடன் உடலுறவு கொள்ள அனுமதித்த கணவன்! பதறவைக்கும் மெசேஜ்-ஆல் வெளிவந்த உண்மை

தன் மனைவிக்கு ராபர்ட் போதை மருந்து கொடுத்ததை ஒப்புக்கொள்வதையும், அவரை 'செத்த பிணம்' என்று குறிப்பிடுவதையும் காட்டும் குறுஞ்செய்தி
Austria wife death case
Austria wife death case
Published on
Updated on
2 min read

ராபர்ட் ஐச்சிங்கர் என்பவர் தனது மனைவிக்கு போதை மருந்து கொடுத்து, மற்ற ஆண்களை தன் மனைவியோடு உடலுறவு கொள்ள அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் அதிர்ச்சியளிக்கும்விதமாக அவரது மனைவி உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூன் 25 அன்று, பாலியல் வன்கொடுமையால் ஏற்பட்ட காயங்களால், ராபர்ட்டின் மனைவியான 39 வயதான டேனியலா ஐச்சிங்கர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது . அவரது கணவரான 51 வயதான ராபர்ட் ஐச்சிங்கர், பணத்தேவைக்காக தன் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவர் சுயநினைவின்றி இருந்தபோது பலமுறை பல ஆண்களை தன் மனைவியோடு உறவுகொள்ள அனுமதித்துள்ளார். தற்போது இந்த குற்றசாட்டுகளுக்காக அவர் விசாரிக்கப்பட்டுவருகிறார் என்று காவல்துறையால் கூறப்படுகிறது.

ராபர்ட்டின் முன்னாள் மனைவி தற்போது இது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவர், தனது அப்போதைய கணவரான ராபர்ட் தன்னையும் தங்களது செல்ல நாயையும் வன்முறையாக நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பெயர் வெளியிட விரும்பாத அந்த 48 வயதுப் பெண் ஒருவர், தங்களது முதல் மகன் பிறந்த பிறகு ராபர்ட் மேலும் வன்முறையாக நடந்துகொள்ளத் தொடங்கியதாகக் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். மேலும், மற்ற தம்பதியினருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவர் தன்னை வற்புறுத்தியதாகவும், ஆனால் அதை தான் மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் விளைவாக, தன்னை பயங்கரமாக தாக்கினார் என்று காவல்துறையிடம் கூறியுள்ளார்.

அந்தக் கொடூரமான தாக்குதலால் அப்பெண்ணின் தாடை எலும்பு முறிந்து, கன்றிப்போனதுடன், அவரது கன்ன எலும்பிலும் காயங்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒருமுறை தனது முன்னாள் கணவர் தங்களது நாயைக் கடுமையாகத் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரியாவின் மார்ச்ட்ரெங்க் நகரில் உள்ள ராபர்டின் வீட்டில், அவர்களின் வாட்டர்பெட்டில் இரத்தக் குளியலில் உயிரற்றுக் கிடந்த அவரது தற்போதைய மனைவியான டேனியலா ஐசிங்கரின் மரணத்தை அவரது மகள் கண்டறிந்த நிலையில், காவல்துறை இதுகுறித்து விசாரித்து வந்த நிலையில் அவரது முன்னாள் மனைவியிடமிருந்து இப்படி ஒரு குற்றசாட்டு வெளிவந்துள்ளது.

அதிகாரிகள் ராபர்டிடம் முதலில் விசாரணை செய்தபோது, ​​அவர் குடிபோதையில் இருந்ததோடு, வன்முறையான உடலுறவின் போது இதுபோன்று நடந்ததாக அவசர சேவைப் பிரிவினரிடம் கூறியுள்ளார். மேலும், அதனால்தான் தன் மனைவி இறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராபர்ட் தனது பக்கத்துவீட்டுகாரரையும் இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்திய அதிர்ச்சி செய்தி விசாரணையில் வெளிவந்துள்ளது. தன் மனைவிக்கு ராபர்ட் போதை மருந்து கொடுத்ததை ஒப்புக்கொள்வதையும், அவரை 'செத்த பிணம்' என்று குறிப்பிடுவதையும் காட்டும் குறுஞ்செய்திகளை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கண்டறிந்ததைத் தொடர்ந்து, 50 வயதான கணவன் கடந்த ஜூலை 2 அன்று கைது செய்யப்பட்டார்.

பிரேதப் பரிசோதனையில், அவருக்கு ஏற்பட்டிருந்த கடுமையான உள் மற்றும் வெளிக்காயங்கள் காரணமாக, அவசர மருத்துவப் பணியாளர்களால் அவரைக் காப்பாற்ற "எதுவும் செய்ய முடியவில்லை" என்றும், ஒரு முக்கிய இரத்த நாளம் வெட்டப்பட்டதால் சில நிமிடங்களிலேயே அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததும் ஏற்பட்டுள்ளது.

தன் மனைவி இறந்த அதே இரவில், ராபர்ட் சுயநினைவின்றி இருந்த தன் மனைவியின் புகைப்படத்தை அண்டை வீட்டுக்காரருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஒரு குறுஞ்செய்தியில் அவர், "நான் அவளுக்கு நன்றாக மது அருந்தக் கொடுக்கிறேன். அதன் பிறகு நீ அவளுடன் மீண்டும் உடலுறவு கொள்ளலாம்" என்ற அருவருக்கத்தக்க குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில், அந்தத் தம்பதியின் மற்றொரு அண்டை வீட்டுக்காரர் உள்ளூர் ஊடகங்களிடம், " ராபர்ட்டின் மனைவி மிகவும் நல்லவர். ஆனால் ராபர்ட் சற்று விசித்திரமானவர். ஒருமுறை அவர் என்னிடம் மனைவிகளைப் பரிமாறிக்கொள்வதில் உங்களுக்கு விருப்பமா? என்று கேட்டார், ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எனக்கு அவரை அவ்வளவாகத் தெரியாததால், அப்படிக் கேட்பது மிகவும் விசித்திரமான விஷயமாக இருந்தது" என்று அவருடனான உரையாடல் குறித்து காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com