

மத்திய தாய்லாந்தின் அயுத்தாயாவைச் சேர்ந்த ஒரு தாய்லாந்து துறவி, தனது அறையில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்ட சிசிடிவி காட்சிகள் பதிவான நிலையில், இருவரும் கடந்த செப்டம்பர் 10, அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாங்காக் போஸ்ட் பத்திரிகையின்படி, அயுத்தாயாவின் முவாங் மாவட்டத்தில் உள்ள பழமையான அரச மடாலயமான 'வாட் புத்தைசவானில்' இருந்து 100 மில்லியன் பாட் பணத்தை கையாடல் செய்ததாக அந்த துறவியும் அவருடன் இருந்த அவரது பெண் உதவியாளர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகார்கள் அளிக்கப்பட்டதை அடுத்து, 'லுவாங் போர் சோட்' என்றும் அறியப்படும் 66 வயதான ஃபிரா வஜிராயனின் இல்லத்தில் காவல்துறை சோதனை நடத்தியதாக தாய்லாந்தின் மத்திய புலனாய்வுப் பிரிவு ஆணையர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நேரத்தில், துறவியின்அறைக்குள் இருந்த கண்காணிப்புக் கேமரா (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தபோது, அந்த துறவி அங்கு இருந்த உணவு உண்ணும் ஒரு மேஜையின் மீது அவரோரு இருந்த பெண்ணுடன் உடலுறவில் ஈடுபடும் காணொளியைக் கண்டறிந்துள்ளனர்.
மேலும், கோயில் தலைவர் கோயில் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், அந்த முறைகேடாகப் பெற்ற பணங்களை அல்லது பொருட்களை மற்றவர்களின் பெயர்களில் மறைப்பதற்காக அந்த பணத்தை தனது பெண் உதவியாளரிடம் வழங்கியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 47 வயதான அந்த துறவியின் பெண் உதவியாளர் புன்யவீ ருங்ருயாங்கும், ஒரு அரசு அதிகாரிக்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இவர்கள் இருவரிடமும் இரகசிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டது, அதில் பல ஆதாரங்கள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளன. அந்தத் துறவி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கோயிலின் பெயரில் 20க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத நன்கொடை ரசீதுகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண் உதவியாளரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுதோறும் பல கோடி பாட் புழக்கத்தில் இருந்ததாக காவல்துறை தரப்பில் இருந்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் தலைமை துறவியின் இதுபோன்ற நடத்தையை இனியும் தங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அவரது முன்னாள் சீடர்களே அந்தப் பாலியல் காணொளிகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
தாய்லாந்தில் உள்ள பல துறவிகள் அரசாங்கத்திடமிருந்து மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவதால், அவர்கள் அரசு அதிகாரிகளாகக் கருதப்படுகிறார்கள் என்று 'தி பாங்காக் போஸ்ட் செய்தி' கூறுகிறது. குற்றம் சாட்டப்பட்ட துறவி ஃபிரா வஜிராயன் 2022-ல் கோயிலின் தலைமைப் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் 'நியூவா டுவாங்' நாணயம் உட்பட, மிகவும் விரும்பப்படும் பௌத்த தாயத்துக்களை உருவாக்கியதன் மூலம் அவர் புகழ் பெற்றவர். மேலும், புன்யவீ vவீட்டிலும் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். மொத்தமாக 1.36 கிலோகிராம் எடை கொண்டதும், 6.04 மில்லியன் பாட் மதிப்புடையது என மதிப்பிடப்பட்டதுமான 35 தங்கத் தாயத்துக்கள், இதர தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளை அவர்கள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்துள்ளனர்.
அதிகாரிகள் 3.6 மில்லியன் பாட் பணம், மூன்று கைபேசிகள், வங்கி ஆவணங்கள், 18 முதலீட்டு ஆவணங்கள் மற்றும் பிற விற்பனை ரசீதுகள் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் இரண்டு அல்லது மூன்று நபர்களும், ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
ஃபிரா வஜிராயன் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் துறவறத்திலிருந்து விடுபடும் விழாவுக்காகக் கோயிலின் துறவற மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் வெள்ளை அங்கிகளை அணிந்து தனது பழைய பெயரான 'அதிச்சோட் தம்மவரோ' என்ற பெயருக்கு மீண்டும் மாறியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் காவலில் எடுக்கப்பட்டு, விசாரணைக்காக தாய்லாந்தின் மத்திய புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.