க்ரைம்

“யாரு நம்பர் இதெல்லாம் எவன் கூடத்தான் நீ பேசுற” - கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி.. கள்ளக்குறிச்சியில் அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்!

ஒரு வேறு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக...

Mahalakshmi Somasundaram

கள்ளக்குறிச்சி மாவட்டம் க.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதுடைய அந்தோணி ராபின். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய அம்மு என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அந்தோணி ராபின் சேலம் சின்னதிருப்பதி பகுதியில் உள்ள கேஸ் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார்.

எனவே சேலத்திலேயே அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்த அந்தோணி ராபின் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். எனவே வீட்டில் இருந்த அம்முவிற்கு அதே பகுதியை சேர்த்த ஒரு வேறு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அம்மு எப்போது செல்போனில் வேறு யாருடனாவது பேசிக்கொண்டே இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்தோணி ராபின் விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரும் போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. வழக்கம் போல் கடந்த சனிக்கிழமை விடுமுறையை முன்னிட்டு வீட்டிற்கு வந்த அந்தோணி ராபின் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரது போன் வாங்கி பார்த்த போது அந்த செல்போனில் பல ஆண்களின் எண்கள் இருந்துள்ளது. எனவே ஆத்திரமடைந்த அந்தோணி “யாரு நம்பர் இதெல்லாம் எவன் கூடத்தான் நீ பேசுற” என கேட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார்.

பின்னர் அனைவரும் படுத்து உறங்கிய நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்தோணி ராபின் எழுந்தபோது தன் மீது பெட்ரோல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அவருடைய மனைவி அம்மு அவர் மீது தீ வைத்திருக்கிறார். இதில் 90% தீக்காயமடைந்து அந்தோணியை மீட்ட அப்பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அந்தோணி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இது குறித்து தகவலறிந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அம்மு தனது கணவர் அந்தோணி ராபின் மீது தீ வைத்ததை ஒப்புக் கொண்டார் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியே கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்