க்ரைம்

“உன் புருஷன கொன்னுட்டேன் பிளான் முடிஞ்சது” - கணவனை கொல்ல கள்ள காதலனை ஏவிய மனைவி… 5 நாட்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!

தசரத் தனது காதலி பிரியங்காவை தொலைபேசியில் அழைத்து, 'பிளான் ஒகே' என்று கூறியதாக

Muthu Lakshmi

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில், ஒருவர் தனது இருசக்கர வாகனத்தின் அடியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முதலில் சாலை விபத்தில் ஏற்பட்ட மரணம் என்ற சந்தேகத்தில் உடலை கைப்பற்றிய காவல்துறை  இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கியது. பின்னரே இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு கொலை என்பது தெரியவந்தது. கிரண் சோனாவானே என அடையாளம் காணப்பட்டர் அந்த நபர்.

கொலை செய்யப்பட்ட கிரணின் மனைவி பிரியங்கா, தசரத் பர்தேஷி என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. மனைவியின் கள்ளத்தொடர்பு உறவுக்கு ஒரு 'தடையாக' இருந்த காரணத்தால், அவரது மனைவி பிரியங்கா மற்றும் அவளின் காதலன் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். பிரியங்காவின் காதலரான தசரத் பர்தேஷி மற்றும் அவரது நண்பரான தீரஜ் யெடே உதவியுடன் இந்தக் கொலையை செய்துள்ளனர். காவல்துறையினர் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் காவலில் எடுத்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று இரவு, தசரத்தும் தீரஜும் கிரணின் கழுத்தை நெரித்துக் கொன்றனர். பின்னர், சாலையோரத்தில் இருந்த இருசக்கர வாகனத்தின் அடியில் அவரது உடலை நசுக்கினர். திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு, தசரத் தனது காதலி பிரியங்காவை தொலைபேசியில் அழைத்து, 'பிளான் ஒகே' என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதே காரணம் எனத் தெரியவந்தது. இருப்பினும், உடலின் நிலை புலனாய்வாளர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. உள்ளூர் காவல்துறை தொழில்நுட்ப விசாரணை நடத்தி, மனைவி பிரியங்கா, அவரது காதலன் மற்றும் அவனது நண்பரைக் கைது செய்தது. குற்றத்தைச் செய்த பிறகு, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தப்பி ஓடி பன்வேலில் பதுங்கியிருந்ததாகவும், அங்கிருந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இந்த விசாரணையில் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்டவரான கிரண், தனது மனைவியைத் துன்புறுத்தி வந்ததாகவும், அதுவே கொலைத் திட்டத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. சாலையோரத்தில் நடந்த மர்ம மரணம் தொடர்பான வழக்கை காவல்துறை ஐந்து நாட்களில் தீர்த்து வைத்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.