"இது நம்ம குழந்தை இல்ல.. குழந்தை கருப்பா இருக்கு" காதலனுடன் சேர்ந்து கொலை செய்த தாய்! IVF முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டம்

பிரியங்காவும் மோகனும் இணைந்து வாழத் தொடங்கிய வாழ்க்கைக்குக் குழந்தை தடையாக இருந்ததால், அவர்கள் குழந்தையைக் கொலையை கொலை செய்துள்ளனர்.
6-Year-Old Girl Murder Case
6-Year-Old Girl Murder Case6-Year-Old Girl Murder Case
Published on
Updated on
2 min read

ஆறு வயது சிறுமி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தற்போது அது கொலை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குழந்தையின் தாயும் வழக்கறிஞருமான பிரியங்கா மற்றும் அவரது நண்பரும் ரியல் எஸ்டேட் அதிபருமான மோகன் ஜி. மகாலிங்கப்பா ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அது உறுதியாகியுள்ளது. தாவணகெரேயில் உள்ள ஒரு சர்வதேசப் பள்ளியின் நிறுவனரும் ஆசிரியருமான, சிறுமியின் தந்தை பிரவீன் பசப்பா அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு தற்போது தொடரப்பட்டது.

குழந்தையின் தாயான பிரியங்காவின் பிறந்த நாளான கடந்த மார்ச் 24 அன்று இரவு அவரது காதலன் மோகனுடன் ஒரு காபி கடைக்குச் சென்றபோது, ​​குழந்தைக்கு பிரியாணியும் ஐஸ்கிரீமும் கொடுத்துவிட்டு, ஏர் கண்டிஷனரை இயக்கியபடி காரில் தூங்க விட்டுச் சென்றதாக அவர் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை, குழந்தை கண்விழிக்கவில்லை என்று கூறப்பட்டது. அவர் உடனடியாக வைட்ஃபீல்டில் உள்ள வைதேகி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதற்கிடையில், குழந்தையின் தந்தை பிரவீன் பிரேதப் பரிசோதனை அறிக்கையை இங்கிலாந்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான தனது சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அவரோ, "இதில் சதி நடந்திருக்கலாம்" எனச் சந்தேகிப்பதாக அவர் கூறியநிலையில் அது உறுதியாகியுள்ளது.

குழந்தையின் வயிற்றில் காயம் இருப்பதாகவும் அது பிரியங்கா மற்றும் அவரது காதலன் மோகனால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதற்கு காரணமாக, அந்த குழந்தை அவர்களுக்கு பிறக்கவில்லை என்பதாலும், குழந்தை கருப்பாக இருப்பதாலும் குழந்தையை கொன்று விடலாம் என்று பிரியங்காவும், அவரது கள்ளகாதலனும் திட்டம் தீட்டியுள்ளனர். மேலும், இருவரும் IVF முறையின் மூலம் வேறொரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவிலும் இருந்துள்ளனர்.

பிரியங்காவும் மோகனும் இணைந்து வாழத் தொடங்கிய வாழ்க்கைக்குக் குழந்தை தடையாக இருந்ததால், அவர்கள் குழந்தையைக் கொலையை கொலை செய்துள்ளனர். தனது புகாரில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு தன் மகள் வயிற்றில் உதைக்கப்பட்டு கொலை செய்ததாக, பிரவீன் குற்றம் சாடியநிலையில் அது உறுதியாகியுள்ளது.

முன்பு, பிரியங்கா ஒரு வழக்குக்காக 2025-ல் பெங்களூரு சென்ற பிறகு, அவருடனான தனது 17 வருட திருமண வாழ்வில் விரிசல்கள் தோன்றத் தொடங்கியதாக பிரவீன் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். அந்தப் பயணத்தின் போது, ​​கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிப்பதாகக் கூறிவந்த ரியல் எஸ்டேட் அதிபரான தனது முன்னாள் கல்லூரித் தோழர் மோகனுடன் அவர் மீண்டும் தொடர்புகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, 2025 டிசம்பரில் இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தம்பதியரின் மூத்த மகள் பிரவீனுடன் தங்கியிருக்க, ஆறு வயது மகள் சீகேஹள்ளியில் உள்ள ஒரு வாடகை வில்லாவில் பிரியங்கா மற்றும் மோகனுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு விவாகரத்தும் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com