செங்கல்பட்டு மாவட்டம், சென்னை ஓஎம்ஆர் சாலை கந்தன்சாவடி பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடைய சிவா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சரண்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிவா கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் அடிக்கடி சவாரிக்கு வெளியில் சென்றுவிட்டு இரண்டு மூன்று நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் சிவா தனது மனைவி சரண்யாவுடன் பேசுவதை தவிர்த்து வந்த நிலையில் கணவனின் நடத்தையின் மீது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவரை கண்காணித்த போது பக்கத்துக்கு ஊரை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் சிவா திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தது சரண்யாவிற்கு தெரியவந்துள்ளது. எனவே கள்ளத் தொடர்பு குறித்து சரண்யா கணவர் சிவாவிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு மீண்டும் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சிவா, மனைவி சரண்யாவை சரமாரியாக தாக்கி, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. சிவா தாக்கியத்தில் மனைவி சரண்யா கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் இரண்டு தையல் போடப்பட்டு சரண்யா சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் சரண்யா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிவா வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்த நிலையில் மனைவி சரண்யாவும் வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து சிவா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.