Ghaziabad stabbing case 
க்ரைம்

ஜிம் டிரைனருடன் தனிமையில் இருந்த மனைவி.. கள்ளக்காதலை கண்டுபிடித்த கணவன்! வாட்ஸாப்பில் போட்ட ஸ்கெட்ச் - அதிகாலையில் அரங்கேறிய கொடூரம்

தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறிவிட்டு பிரியா வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் பிரதாப்பை வீட்டிற்கு அழைத்து அவரோடு தனிமையில் இருந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

Vinvizhi Leninton

அக்டோபர் 26-ம் தேதி காலை, வழக்கம் போல விடிந்தது. தனது மனைவி வழக்கம்போல உடற்பயிற்சி செய்யத்தான் சென்றார் என்று நினைத்த கணவனுக்கு தெரியாது மனைவியின் கள்ளக்காதலன் வந்து தன்னை கொலை செய்ய முயற்சிப்பார் என்று. டெல்லி அருகே உள்ள வசுந்தராவில், மனைவியின் கள்ளக்காதலன் வீட்டிற்குள் நுழைந்து பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதற்காக, பாதிக்கப்பட்டவரின் மனைவியையும் அவரது உடற்பயிற்சி பயிற்சியாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்திராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசுந்தரா செக்டர்-1 இல் உள்ள ஜாக்ரிதி குடியிருப்போர் நலச் சங்கத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஷஷாங்க் பூர்வீகமாக ஜான்சியின் புராணி பசாரத் பகுதியைச் சேர்ந்தவர். அவர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரியாவைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் டெல்லியில் மூத்த கணக்காளர்களாகப் பணிபுரிந்துவந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்களது குடும்பம் வசுந்தரா செக்டர்-1 இல் வசித்து வந்துள்ளனர். மேலும், காவல்துறையினரின் கூற்றுப்படி இது பிரியாவின் இரண்டாவது திருமணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 'ஃபிட்னஸ் ஹெட் குவார்ட்டர்ஸ்' உடற்பயிற்சி கூடத்தில் பிரியா சேர்ந்துள்ளார். அவரது பயிற்சியாளராக பிரதாப் சிங் இருந்துள்ளார். பிரியா ஜிம்மில் சேர்ந்த அடுத்த மாதமே பிரதாப் மற்றும் பிரியாவிற்கு திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் மாத இறுதியில் ஷஷாங்க்-கிற்கு இந்தக் கள்ள உறவு பற்றித் தெரியவரும் வரை அந்த உறவு தொடர்ந்துள்ளது. கணவர் ஷஷாங்க் அவரது மனைவி பிரியாவை நேருக்கு நேர் சந்தித்து, அந்த உறவை முறித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அவர் பிரியாவிடம் ஒன்று "உடற்பயிற்சிக் கூடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்" அல்லது "சிங் பணிபுரியும் இடத்திற்குச் செல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து ஷஷாங்க் டெல்லியில் வேறொரு வீடு தேடத் தொடங்கியுள்ளார். அப்போதுதான் தம்பதியினருக்குள் தகராறு முற்றியதாக காவல்துறை சந்தேகிக்கிறது. ஷஷாங்க் ஞாயிற்றுக்கிழமையன்றே ஒரு வீட்டை இறுதி செய்ய எண்ணியிருந்ததாகவும், பிரியா இந்தத் திட்டத்தை எதிர்த்ததாகவும், கூறப்படுகிறது.

இதனையடுத்து, பிரியா தனது கணவரின் திட்டங்கள் குறித்து அவரது கள்ளகாதலனான பிரதாப்பிடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து அவரைக் கொல்ல வாட்ஸாப்பில் சதித்திட்டம் தீட்டியதாகவும் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும், தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறிவிட்டு பிரியா வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் பிரதாப்பை வீட்டிற்கு அழைத்து அவரோடு தனிமையில் இருந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பிரியா வழக்கமாக அதிகாலை 5 மணியளவில் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது அவரது கணவரும் மகளும் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்கள். ஆனால், பிரியா வீட்டின் கதவினை பூட்டாமல் சென்றுள்ளார். இதனால், பிரதாப் வீட்டிற்குள் எளிமையாக நுழைந்து கத்தியால் தாக்கியுள்ளார்.

ஷஷாங்க்கை கத்தியால் குத்திவிட்டு இரத்த கரைகளோடு அவர் வீட்டில் இருந்து தப்பி ஓட முயன்றபோது அண்டை வீட்டுக்காரரிடம் சிக்கியுள்ளார். மேலும், பிரதாப் குடியிருப்பின் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். பின்னர் அந்த குடியிருப்பு காவலர்கள் அவரை துரத்தி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், பக்கத்துவீட்டுக்காரர்கள் ஷஷாங்க்-கை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், அவர்களது குழந்தை எந்தவித காயமும் இன்றி மீறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதாப் மற்றும் பிரியா ஆகிய இருவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காவல்துறை கைது செய்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்