Punjab crime news 
க்ரைம்

வெளிநாட்டிலிருந்து வந்ததும் கள்ளத்தொடர்பா? படுக்கையறையில் சடலமாக கிடந்த மனைவி! இரத்தம் படிந்த கத்தியுடன் கணவன் செய்த செயல்

கமல்தீப் (தாய்) கள்ள உறவில் இருப்பதாகத் தனது தந்தை சந்தேகித்ததாகவும், அதுவே தம்பதியினருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Vinvizhi Leninton

பஞ்சாபி மாநிலம் லூதியானா, தனது மனைவி கள்ளத் தொடர்பு கொண்டுள்ளார் எனச் சந்தேகித்து சனிக்கிழமை (அக் 31)அன்று தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தம்பதியினர் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய சில நாட்களிலேயே, இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூதியானாவின் விகாஸ் நகரில், பக்கோவால் சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டில், 49 வயதான கமல்தீப் கவுர் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், படுக்கையறைத் தரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அப்பெண்ணின் மகன் ககன்தீப் சிங் கூறியபடி, அவரது தந்தை ரவீந்தர் சிங், சனிக்கிழமை மாலை 4:30 மணியில் இருந்து 5 மணிக்குள், ஒரு வேலையாக தன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து ககன்தீப் சிங் திரும்பி வந்தபோது, ​​அவரது தாய் தரையில் இரத்தக் காயங்களுடன், பல கத்திக்குத்து காயங்களுடன் கிடப்பதைக் கண்டுள்ளார்.

உடனடியாக, தனது தாயான கமல்தீப் கவுரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்துள்ளனர்.

தனது தாயும் தந்தையும் கடந்த ஆறு மாதங்களாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்ததாகவும், கடந்த வெள்ளிக்கிழமை அன்று லூதியானாவுக்குத் திரும்பியதாகவும் ககன்தீப் தெரிவித்துள்ளார். அப்போது, அவர்களை அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வர அவரது மகன் சென்றிருந்தார். இதற்கு முன்பு, கமல்தீப் (தாய்) கள்ள உறவில் இருப்பதாகத் தனது தந்தை சந்தேகித்ததாகவும், அதுவே தம்பதியினருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது மனைவியை கொலை செய்துவிட்டு, ​​ஆதாரங்களை மறைப்பதற்காக ரவீந்தர் கத்தியைக் கழுவி ஓரமாக வைத்துவிட்டதாக ககன்தீப் குற்றம் சாட்டியுள்ளார்.

நரிந்தர் கவுர் என அடையாளம் காணப்பட்ட ஒரு அண்டை வீட்டுக்காரர், தான் அருகிலுள்ள குருத்வாராவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அந்த வீட்டின் வாசல் கதவு திறந்திருந்ததைக் கவனித்ததாகவும், அதனால் ஏதோ தவறு நடந்திருப்பதாகத் தனக்குச் சந்தேகம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, துக்ரி போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

காவல் நிலைய அதிகாரி குர்முக் சிங் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவரின் முதுகு மற்றும் அடிவயிற்றில் கத்தியால் குத்தியதில், அவரது இரத்த நாளங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரான அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கொலைக்கான நோக்கம் மற்றும் தம்பதியினருக்கு இடையேயான தகராறின் தன்மை குறித்தும் காவல்துறை தற்போது விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.