women cut her 9 month old baby nerve amd hung her self 
க்ரைம்

“9 மாத குழந்தை என்ன பண்ணுச்சு” பிஞ்சு கைகளை பிளேடால் அறுத்து..! தாய் எடுத்த விபரீத முடிவு..!

ணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது‌‌ . இதனால் தஸ்லீம்பானு , கோபித்துக் கொண்டு மஞ்சவாடி யில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று விடுவார்.

malaimurasu.com

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில்  9 மாத குழந்தையை கொன்று தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை  அடுத்த பொம்மிடி வடந்தையூர் பகுதியை சேர்ந்தவர் அக்பர்,27 தனியார் போட்டோ ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் மஞ்சவாடி பகுதியை சேர்ந்தவர் ஜானிபாஷா என்பவரின் மகள் தஸ்லீம்பானு,20. இவர்கள் இருவருக்கும் கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆத்தீப்,(9 மாதம்) என்ற ஆண் குழந்தையும்  உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது‌‌ . இதனால் தஸ்லீம்பானு , கோபித்துக் கொண்டு மஞ்சவாடி யில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று விடுவது வழக்கமாகி இருந்து வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தஸ்லீம்பானு பெரியவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின் வடசந்தையூரில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அக்பர் ஸ்டுடியோவில் பணி முடிந்து   தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு உள் தாழிட்டு இருந்தது. ‌அப்போது கதவு வழியாக பார்க்கும் போது, தஸ்லீம்பானு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதையடுத்து அக்பர் கூச்சலிடவே உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.அப்போது குழந்தை ஆத்திப்பின் இடது கை மணிக்கட்டு வில் பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.பின் தஸ்லீம்பானு இரு கைகளிலும் பிளேடால் அறுக்கப்பட்டு சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.இது குறித்து புகாரின் படி  அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் வான்மதி நேரில் பார்வையிட்டு கணவர் அக்பர் உள்ளிட்ட உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதனை அடுத்து தர்மபுரியில் இருந்து வந்த தடய அறிவியல் துறையினர் வீட்டில் தடயங்களை சேகரித்தனர் பின் பிரேத பரிசோதனைக்காக தஸ்லீம்பானு, ஆத்திப் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் தஸ்லீம்பானு மகன் ஆத்திப்பை பிளேடால் கையை அறுத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்ய பட்டாரா?என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்