சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலரான 29 வயதுடைய புவனேஸ்வரி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து ஆவடி பெட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அயல் பணியாக எழும்பூர் குற்றப் பிரிவில் பணியாற்றி வந்தார். புவனேஸ்வரி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சிலம்பரசன் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வசித்து வந்திருக்கிறார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில மாதங்கள் இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் சிலம்பரசன் தன் மனைவி புவனேஸ்வரி மீது சந்தேகப்பட்டு தினமும் மது அருந்தி விட்டு வந்து அடித்து சித்திரவதை செய்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த சிலம்பரசன் தன் மனைவி புவனேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு “என்னை தவிர வேற எவன் கூட எல்லாம் குடும்பம் நடத்துற” என கேட்டு அடித்து துன்புறுத்தி இருக்கிறார். பின்னர் இருவரும் உறங்க சென்ற நிலையில் காவலர் புவனேஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நள்ளிரவில் கணவர் இடையில் எழுந்து பார்த்த போது மனைவி தூக்கில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் எழும்பூர் போலீசார் விரைந்து சென்று பெண் காவலர் புவனேஸ்வரி உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் திருமணம் ஆன நாள் முதல் புவனேஸ்வரியின் கணவர் சிலம்பரசன் சந்தேகப்பட்டு அடித்து கொடுமைப்படுத்தி வந்ததும் திருமணத்திற்கு முன்பு புவனேஸ்வரி தனது நபருக்கு கொடுத்த பணத்தை மீண்டும் வாங்குமாறு வற்புறுத்தியது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து புவனேஸ்வரி தனது நண்பர் சிவமூர்த்தியிடம் பணத்தை திருப்பி கேட்ட போது அவர் தர மறுத்ததால் இரு தினங்களுக்கு முன்பு புவனேஸ்வரி இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும் கணவரின் சந்தேக புத்தியாலும் மன வருத்தமடைந்த புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.. இதனை தொடர்ந்து போலீஸார் புவனேஸ்வரி கணவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருப்பதால் அவரிடம் போதை தெளிந்த பிறகு இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.