டெல்லி ராஜ்பாத் நகரை சேர்ந்தவர் குல்தீப். இவர் அதே பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்த நிலையில் இவருக்கு திருமணம் ஆகி ருசித்தா என்ற மனைவியும் 14 வயதில் கிரிஷ் என்ற மகனும் இருந்தனர். குல்தீப்புடன் கடைக்கு சென்று அவ்வப்போது ருசித்தா உதவி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குல்தீப்பின் கார் டிரைவராக பிகரை சேர்ந்த முகேஷ் என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். கார் ஒட்டு மட்டுமின்றி வீட்டின் அனைத்து வேலைகளுக்கும் முகேஷ் உதவியாக இருந்துள்ளார்.
எனவே அவரிடம் நெருக்கமான ருசித்தாவும் குலதீப்பும் அவரை குடும்பத்தில் ஒருவராக பார்த்துள்ளனர். இதற்கிடையே முகேஷின் தாயிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர்களது மருத்துவ செலவுக்கு குல்தீப் முகேஷிடம் 40 ஆயிரம் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார். மேலும் முகேஷிடம் போன் இல்லாததால் அவருக்கு போன் வாங்கி கொடுத்துள்ளனர். தொடர்ந்து முகேஷ் வேலை செய்து வந்து உள்ளார்.
திடீரென முகேஷ் ஒரு வரம் வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுத்த நிலையில் குல்தீப் போன் செய்தால் அதையும் எடுக்காமல் இருந்துள்ளார். பிறகு வேலைக்கு வந்த முகேஷ் வீட்டிற்கு சென்று ருசித்தாவிடம் உடல்நிலை சரியில்லாததால் வர இயலவில்லை என கூறியுள்ளார். கோபத்தில் இருந்த ருசித்தா முகேஷை “இது என்ன சத்திரம் உன் இஷ்டத்துக்கு லீவ் எடுக்க வேலை செய்ய விருப்பம் இருந்த இரு இல்லனா 40 ஆயிரம் காசு குடுத்துட்டு கிளம்பு” என கூறி திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த முகேஷ் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். தன்னை புரிந்து கொள்ளாததால் ரச்சிதா மீது ஆத்திரமடைந்த முகேஷ், அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி, அன்று மாலை மீண்டும் ருசித்தா வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்பது போல் நடித்து அவரை குத்தி கொலை செய்துள்ளார். இதை பார்த்த கிரிஷையும் கொலை செய்த முகேஷ் பின்னர் வீட்டின் முன்பக்க கதவை உட்புறமாக பூட்டிவிட்டு பின் வாசல் வழியாக தப்பி சென்றுள்ளார். வழக்கம் வேலை முடித்து வீட்டுக்கு வந்த குல்தீப் வீட்டின் கதவு பூட்டி இருப்பதாய் அறிந்து மனைவிக்கு போன் செய்துள்ளார்.
வெகுநேரமாகியும் போன் எடுக்காததால் பொறுமையை இழந்த குல்தீப் கதவை உடைந்து கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். தனது மனைவி மற்றும் மகன் இருந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த குல்தீப் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து முகேஷ் தான் குற்றவாளி என்று உறுதி செய்த போலீசார் பீகாருக்கு தப்ப முயன்ற முகேஷை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
வீட்டிற்கு வேலை செய்ய வந்த ஒருவர் அந்த வீட்டில் இருந்த தாய் மற்றும் மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மற்றும் மகனை இழந்த குல்தீப் இனி யாருக்காக வாழப்போகிறேன் என கதறி அழுவது போலீசாரையும் கண்கலங்க செய்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.