சொந்த தந்தையாலேயே பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாக குழந்தைகள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த குற்ற சம்பவத்திற்கு குழந்தைகளின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, ரஷ்யப் பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
35 வயதான டட்யானா கிராசிகோவா (தாய்), இந்த பாலியல் குற்ற சம்பத்திற்கு உடந்தையாக இருந்ததற்காகக் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளார். அவர் அந்தக் கொடூரமான பாலியல் தாக்குதலை குறித்து நன்கு அறிந்திருந்தும் தன் குழந்தைகளிடம் "தங்கள் தந்தைக்குக் கீழ்ப்படியுமாறு" தாய் அறிவுறுத்தியதை என்றும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேலும், அவரது கணவரான 36 வயது ரோமன் கிராசிகோவ் (தந்தை), சுமார் ஒன்பது ஆண்டுகளாகத் தனது மைனர் மகள்களுக்கு எதிராகத் திட்டமிட்ட பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றத்திற்காகத் தற்போது தண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தம்பதியரின் மகள்களுக்கு ஒன்பது அல்லது பத்து வயதாக இருந்தபோதுதான் இந்தத் துன்புறுத்தல் தொடங்கியதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக இந்த பாலியல் தாக்குதல் சம்பவம் தொடர்ந்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
"அப்பா என்ன கேட்டாலும் அதைச் செய்யுங்கள்" என்று தன் தாய் சகோதரிகளுக்கு அறிவுறுத்தியதாக மகள்களில் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. தங்களது மகள்களுக்கு ஒன்பது அல்லது பத்து வயது ஆனவுடனேயே ரோமன் அவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவரது மனைவி டட்யானா உதவியதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது . "ஒரு சிறுமியின் உதவியற்ற நிலையைப் பயன்படுத்தி, அவருக்கு எதிராக வன்முறையான பாலியல் செயல்களில் ஈடுபட்ட" குற்றத்திற்காக டட்யானாவிற்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது. மூத்த மகள் கல்லூரிக்குச் செல்லும் நிலையில், தானும் தன் சகோதரிகளும் அனுபவித்த கொடுமைகளைத் தன் காதலனிடம் வெளிப்படுத்தியபோதுதான், பல ஆண்டுகளாக சொந்த தந்தையாலேயே நடந்த இந்த சொல்லவொண்ணா கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
அவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததையடுத்து, குற்றவியல் விசாரணையை மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக ரோமன் கைது செய்யப்பட்டு, இறுதியில் தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. "இவை அனைத்தும் தாய்க்கு தெரிந்திருந்தது, மேலும், குழந்தைகள் இதுகுறித்து, 'அப்பாவை ஒருபோதும் மறுக்க மாட்டோம். அப்பா தான் எங்கள் குடும்பத்தின் வருமானத்திற்குக் காரணமானவர் மற்றும் எங்களைக் காப்பவர்' இன்று கூறியுள்ளனர். மேலும், அந்த குழந்தைகள் தங்கள் தாயிடம் இதுகுறித்து புகார் செய்தபோதும், 'அப்பா கேட்பதை எல்லாம் செய்யுங்கள்' என்று கூறியதாக மகள்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். இது அனைத்தும் டட்யானாவின் கண் முன்னாலேயே நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
அந்தத் தம்பதியினர் தங்கள் பதின்மபருவத்தில் சந்தித்து, திருமணம் செய்து 12 குழந்தைகளைப் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், 2019-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு வீட்டுக் தீ விபத்தில், அவர்களது நான்கு குழந்தைகள், அதாவது மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உயிரிழந்தது. ஆனால் இந்த குடும்பம் குறித்து அண்டை வீட்டார், "குழந்தைகள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், நன்றாக உணவு உண்டு, முறையாக உடை மற்றும் காலணி அணிந்து, பள்ளிக்குச் சென்று, விளையாடி, நண்பர்களுடன் பழகினர். அவர்களிடமிருந்து எந்தப் புகாரும் இல்லை," என்று கூறியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்