உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த ஒரு பெண், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தன் கணவரோடு தேனிலவு சென்றிருந்தபோது, தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தனது கணவரால் தாக்கப்பட்டதாகவும், கழுத்தை நெரித்ததாகவும் குற்றம் சாட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023-ம் ஆண்டில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, கணவன் மற்றும் மனைவியின் குடும்பங்களுக்கு இடையே நடந்த இந்த கசப்பான நிகழ்வினை சமரசம் செய்து வைக்க எண்ணிய முயற்சியும் தோல்வியடைந்த பின்னரே தற்போது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறபடுகிறது. மேலும், உள்ளூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்க சென்றநிலையில் இதுகுறித்து காவல்துறை ஆரம்பத்தில் செவிசாய்க்கப்படவில்லை என்றும் அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மனரீதியாக துன்புறுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, அந்தப் பெண்ணின் மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் செக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோரக்பூரைச் சேர்ந்த அப்பெண், 2023-ம் ஆண்டு தம்பதிகள் தேனிலவிற்கு சென்றுள்ளனர். ஆனால் அப்போது அந்த பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவரும் டெல்லியைச் சேர்ந்தவருமான நிகில் மிஸ்ரா, அவரை அறைந்து, உதைத்து, குத்தியதோடு, கழுத்தை நெரித்துக் கொல்லவும் முயன்றதாகத் தனது புகாரில் தெரிவித்துள்ளார். புகார்தாரரின் கூற்றுப்படி, அவரது அலறல் சத்தத்தைக் கேட்டுத் தலையிட்ட ஹோட்டல் ஊழியர்களால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
2023-ம் ஆண்டு மே 30-ம் தேதி டெல்லியில் மிஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டதாக அப்பெண் கூறியுள்ளார். மேலும், திருமணத்தின் போது தனது தந்தை சுமார் 20 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், ஒரு கார் மற்றும் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இதரப் பொருட்களையும் பரிசாக வழங்கியதாகப் புகார்தாரர் மேலும் தெரிவித்துள்ளார். 2023 ஜூன் 2-ம் தேதி டெல்லியில் உள்ள தனது திருமண வீட்டிற்கு குடிபெயர்ந்ததாகவும், அதன் பிறகு வரதட்சணையாகப் பெற்ற பொருட்கள் தொடர்பாகத் தனது மாமியார் வீட்டார் தன்னை ஏளனம் செய்து அவமானப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திருமணம் ஆகி சுமார் ஒரு மாதம் கழித்து, அந்தத் தம்பதியினர் தங்களது தேனிலவுக்காக ஜூலை 4 அன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குப் பயணம் செய்தனர். அந்தப் பயணத்தின்போது தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து கடுமையான வயிற்று வலியும் அதிக இரத்தப்போக்கும் ஏற்பட்டதாகவும் அப்பெண் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். மேலும், தன் கணவர் கோபமடைந்து, "தனது மாதவிடாய் பற்றி ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியதாக அவர் குற்றம் சாட்டினார். மிஸ்ரா, தன் மனைவி "தனது மனநிலையைக் கெடுத்துவிட்டதாக"க் குற்றம் சாட்டி, அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
புகார்தாரர், டெல்லிக்குத் திரும்பிய பிறகு தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தனது மாமியார் மற்றும் நாத்தனாரிடம் விவரித்ததாகவும், ஆனால் அவர்கள் அதற்குப் பதிலாகத் தன்னை மனரீதியாகத் துன்புறுத்தத் தொடங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் அந்த பெண் தனது தந்தையை அழைத்து, டெல்லிக்கு வந்து தன்னை கோரக்பூருக்குத் திரும்ப அழைத்துச் செல்லுமாறு கேட்டதாக அப்பெண் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர், இனி அந்த பெண்ணுடன் வாழ விரும்பவில்லை என்று தனது மாமனாரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
திருமணம் ஆகி சுமார் 45 நாட்களுக்குப் பிறகு, 2023 ஜூலை 14 அன்று, தான் தனது திருமண வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் பிரச்சனையில் சமரசம் செய்து தீர்ப்பதற்காக அவரது தந்தை டெல்லிக்குச் சென்றபோது, அவரும் அப்பெண்ணின் மாமனார் வீட்டாரால் அவமானப்படுத்தப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் (FIR) குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தனது மாமியார் வீட்டிற்கு வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட பொருட்கள் திருப்பித் தரப்படவில்லை என்றும், தனது கணவர் தொடர்ந்து தனக்கு மிரட்டல் செய்திகளை அனுப்பி வருவதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். அவர் காவல்துறையை பலமுறை அணுகியும், தனது கணவர் மற்றும் மாமியார் வீட்டார் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப் போராடியதாகக் கூறப்படுகிறது. கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் தலையீட்டிற்குப் பிறகு, ஆகஸ்ட் 15, சனிக்கிழமையன்று இந்த வழக்கு இறுதியாகப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்