க்ரைம்

“என் கூட மட்டும் தான்..” – காதலியை கழுத்தறுத்து கொன்ற வாலிபர்.. சடலம் அருகே அமர்ந்து போன் பார்த்த கொடூரம்!

இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தேவன்ஷ் ...

Mahalakshmi Somasundaram

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நர்பத்கேடா பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய கல்லூரி மாணவி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் தேவன்ஷ் என்பவருடன்  கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அதே பகுதியில் உள்ள கல்லுரியில் பி.ஏ பட்டப்படிப்பில் சேர்ந்து ஒன்றாக படித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் மாணவி தன்னுடன் படிக்கும் மற்ற ஆண் நண்பர்களிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத தேவன்ஷ் மாணவியை மற்ற நண்பர்களுடன் பேச கூடாது என கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் மாணவி தேவன்ஷ் உடன் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து மாணவியை தொல்லை செய்து வந்த காதலன் தேவன்ஷ் மாணவியை எப்படியாவது தன்னுடன் இயல்பாக பேச வைக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி கடந்த இரண்டு தங்களுக்கு முன்பு (ஆக 05) ஆம் தேதி மாணவியின் பெற்றோர் குடும்ப நிகழ்ச்சிக்கு வெளியூருக்கு சென்றுள்ளார். எனவே மாணவி தனது தங்கையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த தேவன்ஷ் மாணவியின் வீட்டிற்கு செல்ல திட்டமிட்ட நிலையில், மாணவியின் தங்கை அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தேவன்ஷ் மாணவியின் வீட்டிற்குள் சென்று அவரிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டாதாக  சொல்லப்படுகிறது, இதில் ஆத்திரமடைந்த வாலிபர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாணவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு அவரது உடலுக்கு அருகில் அமர்ந்து போன் பார்த்து கொண்டு இருந்துள்ளார். 

இந்நிலையில் நண்பர் வீட்டிற்கு சென்ற மாணவியின் தங்கை மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்து போது அவரது அக்கா ரத்தவெள்ளத்தில் கிடந்ததையும் அருகில் கத்தியுடன் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்ததையம் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது குறித்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருகில் இருந்த வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி வீட்டிற்குள் புகுந்து வாலிபர் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு சடலத்திற்கு அருகில் அமர்ந்து போன் பார்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்