க்ரைம்

“சிறுமி குளிப்பதை எட்டிப் பார்த்த வாலிபர்.. தட்டிக்கேட்ட பெற்றோருக்கு கொலை மிரட்டல் - சித்தப்பாவுடன் போக்சோவில் கைது!”

தொடர்ந்து சிறுமியின் தாய் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள வேம்பனேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தினேஷ்குமார் என்பவர், சிறுமி பள்ளிக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து தன்னுடன் பழகுமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி சிறுமி தனது வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டியிருந்தார், அதனை ஜன்னல் வழியாக தினேஷ்குமார் எட்டிப் பார்த்துள்ளார். இதனை அறிந்த அந்த சிறுமி அதிர்ச்சியடைந்த அலறியுள்ளார், சிறுமி அலறியதும், அங்கிருந்து தினேஷ்குமார் தப்பிச்சென்றுள்ளார். பின்னர் சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த பெற்றோர், என்ன நடந்தது என்று கேட்டபோது, நடந்த சம்பவத்தை சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் தினேஷ்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார், சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவத்தை குறித்து தினேஷ்குமாரை கண்டித்துள்ளனர். அப்போது, தினேஷ்குமார் வீட்டிலிருந்த சித்தப்பா சுந்தரராஜன், சிறுமியின் பெற்றோர் தினேஷ்குமாரிடம் பேசுவைதை பார்த்த அவர் சிறுமியின் பெற்றோரை கொலை மிரட்டல் விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதை தொடர்ந்து சிறுமியின் தாய் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கார்த்திகேயனி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததும், குளிப்பதை எட்டிப் பார்த்ததும் உறுதியானதை தொடர்ந்து தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் அவரது சித்தப்பா சுந்தரராஜனையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். சிறுமி பாதுகாப்பு தொடர்பான இந்த சம்பவம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.