செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பாட்டி மற்றும் 5 வயது பேரன் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தான கவுண்டன் புதூர் கிராமத்தை சேர்ந்த சித்ரா (வ-61) அவரது பேரன் ஜஸ்வந்த் (வ-5).செங்கம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை குறுக்கே 100 நாள் பணிக்கு சித்ரா சென்றுள்ளார். அவர் உடன் தனது பேரன் ஜஸ்வந்த்தையும் அழைத்து சென்றுள்ளார். அவர்கள் இருவரும் சாலையை கடக்க முயன்றபோது தி-மலையில் இருந்து செங்கம் வழியாக ஓசூர் நோக்கி அதிவிரைவாக வந்த கார் இவர்கள் இருவர் மீதும் மோதியுள்ளது.
இந்த விபத்தில் பாட்டி சித்ரா மற்றும் பேரன் ஜஸ்வந்த் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாச்சல் காவல்துறையினர் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
5 வயது பேரன் மற்றும் பாட்டி சாலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதையுமே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்