
பில் கேட்ஸை தெரியாதவங்க இருக்க முடியாது, மைக்ரோசாஃப்டோட நிறுவனர், உலகத்துலயே மிகப் பெரிய பணக்காரர்கள்ல ஒருத்தர். இவரோட மகள் பியோபி கேட்ஸ், 22 வயசுல ஒரு தொழிலை ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, இவங்க தொழிலுக்கு பில் கேட்ஸ் ஒரு ரூபா கூட நிதி கொடுக்கலை! ஆச்சர்யமா இருக்குல்ல..!
Phia ஆப் பத்தி தெரியுமா?
பியோபி கேட்ஸ், 22 வயசு, ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியில படிச்சவங்க. இவங்க தன்னோட முன்னாள் ரூம்மேட் சோஃபியா கியானியோட சேர்ந்து ஒரு AI-பவர் ஆன ஆப் உருவாக்கியிருக்காங்க, பேரு Phia. இந்த ஆப், ஆன்லைன் ஷாப்பிங்கை ரொம்ப ஸ்மார்ட்டா, சுலபமா மாற்றுது. 40,000-க்கு மேற்பட்ட இ-காமர்ஸ் வெப்சைட்கள்ல இருக்குற புது, பயன்படுத்தப்பட்ட பொருட்களோட விலைகளை ஒப்பிட்டு, சிறந்த டீல்களை காட்டுது. இது மட்டுமில்ல, நிலைத்தன்மையை (sustainability) மனசுல வச்சு, செகண்ட்-ஹேண்ட் ஆப்ஷன்களையும் சஜஸ்ட் பண்ணுது. இந்த ஆப், ஏப்ரல் 24, 2025-ல லான்ச் ஆனது, இப்போ வென்ச்சர் கேப்பிட்டல் ஃபண்டிங், பிரபல ஆளுமைகளோட ஆதரவையும் பெற ஆரம்பிச்சிருக்கு.
பியோபி, இந்த ஆப் குறித்து பேசுகையில், “நாங்க சாதாரண பொண்ணு, ஷாப்பிங் சைட்கள்ல டீல் தேடுறவங்க. இது எங்களோட அனுபவத்துல இருந்து வந்த ஐடியா”னு நியூயார்க் டைம்ஸ்க்கு சொல்லியிருக்காங்க. இந்த ஆப், இளைஞர்களோட ஷாப்பிங் அனுபவத்தை மாற்றுற மாதிரி ஒரு புது முயற்சியா பார்க்கப்படுது.
பில் கேட்ஸ் ஏன் நிதி கொடுக்கலை?
பில் கேட்ஸ், உலகத்துல 13-வது பெரிய பணக்காரர், இவரோட சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலருக்கு மேல. இவர் வேணும்னா பியோபியோட ஆப்புக்கு முழு நிதியையும் கொடுத்து, ஒரு நொடில பெரிய வெற்றியா மாத்தியிருக்கலாம். ஆனா, இவர் ஏன் இதை பண்ணலை? ஒரு நியூயார்க் டைம்ஸ் இன்டர்வியூல, பில் கேட்ஸ் இதுக்கு ஒரு சுவாரஸ்யமான காரணத்தை சொல்லியிருக்காரு. “நான் நிதி கொடுத்திருந்தா, பியோபியின் தொழிலோட ஒவ்வொரு விஷயத்தையும் நான் செக் பண்ணியிருப்பேன். ஆனா, பியோபி என்கிட்ட நிதி கேட்கலை, இது ஒரு நல்ல விஷயமா போச்சு”னு சொல்லியிருக்காரு.
இதுக்கு பின்னாடி, பில் கேட்ஸ் தன்னோட குழந்தைகளுக்கு சுதந்திரமான பாதையை உருவாக்க விடணும்னு நினைக்குறாரு. இவர், பியோபியோட தொழிலுக்கு நிதி கொடுத்திருந்தா, ஒரு முதலீட்டாளரா அவரோட கருத்துகளை திணிச்சிருக்கலாம், இது பியோபியோட சொந்த முயற்சியை கட்டுப்படுத்தியிருக்கும். அதுக்கு பதிலா, இவர் பியோபிக்கு ஆலோசனைகளை மட்டும் கொடுத்திருக்காரு, குறிப்பா பணியாளர்களை தேர்ந்தெடுக்குற விஷயத்துல. “ஷாப்பிங் விஷயத்துல நான் சரியான ஆளு இல்லை, ஆனா மனிதர்களை மேனேஜ் பண்ணுறதுல கொஞ்சம் அனுபவம் இருக்கு”னு சிரிச்சுக்கிட்டே சொல்லியிருக்காரு.
கேட்ஸ் குடும்பத்தோட மதிப்புகள்
பில் கேட்ஸும், இவரோட முன்னாள் மனைவி மெலிண்டா ஃப்ரெஞ்ச் கேட்ஸும், தங்களோட மூணு குழந்தைகளையும் – ஜெனிஃபர் (28), ரோரி (25), பியோபி (22) – ஒரு நடுத்தர வர்க்க மதிப்புகளோட வளர்த்திருக்காங்க. இவங்க மாபெரும் பணக்கார குடும்பமா இருந்தாலும், குழந்தைகளுக்கு எல்லாத்தையும் தட்டுல வச்சு கொடுக்குறது சரியில்லைனு நம்புறாங்க. ஒரு பாட்காஸ்ட்ல பில் கேட்ஸ் சொல்லியிருக்காரு, “நான் என் குழந்தைகளுக்கு 1% சொத்து மட்டுமே விடப் போறேன், ஏன்னா இதுக்கு மேல இருந்தா அவங்களுக்கு அது உதவியா இருக்காது. இது ஒரு வம்சாவளி இல்லை”னு. இந்த 1% கூட இந்திய ரூபாய்ல பார்த்தா சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல
மெலிண்டாவும் இதே கருத்தை ஆதரிச்சிருக்காங்க. பியோபி ஒரு இன்டர்வியூல சொல்லியிருக்காங்க, “என்னோட அம்மா, நான் சொந்தமா சம்பாதிக்கணும்-னு சொன்னாங்க. இது எனக்கு ஒரு கற்றல் அனுபவமா, தோல்வியை கையாளுற அனுபவமா இருக்கும்னு நினைச்சாங்க”. இதனால, பியோபி தன்னோட தொழிலுக்கு வெளியில இருந்து வென்ச்சர் கேப்பிட்டல் ஃபண்டிங் திரட்டியிருக்காங்க, இதுல பிரபலங்களான க்ரிஸ் ஜென்னர் மாதிரியான ஆளுமைகளோட ஆதரவும் கிடைச்சிருக்கு.
‘நெப்போ பேபி’ பயம்
பியோபி, கேட்ஸ் குடும்பத்தோட மகளா இருக்குறது ஒரு பெரிய பொறுப்பு. இவங்க ஒரு பாட்காஸ்ட்ல பேசுறப்போ, “நான் ‘நெப்போ பேபி’னு (nepo baby – பெற்றோரோட செல்வாக்கு மூலமா வெற்றி பெறுறவங்க) பார்க்கப்படுவேனோனு பயந்தேன்”. இதனால, இவங்க Phia ஆப்பை, தன்னோட சொந்த அனுபவத்தோட, சாதாரண இளைஞர்களோட பிரச்சனைகளை தீர்க்குற மாதிரி உருவாக்கியிருக்காங்க. “நாங்க ரூம்மேட்ஸா இருந்தப்போ, ஆடைகளைப் பத்தி வாக்குவாதம் பண்ணுவோம், டீல்களை தேடுவோம். இது எங்களோட கதை, இதுல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்திருக்காங்க”னு சொல்லியிருக்காங்க.
பியோபி, ஸ்டான்ஃபோர்டுல படிக்கும்போது, தன்னோட தொழிலுக்காக கல்லூரியை விடலாம்னு நினைச்சிருக்காங்க. ஆனா, பில் கேட்ஸும் மெலிண்டாவும் இதுக்கு கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. “நீ பட்டம் முடிக்கணும், கல்லூரியை விட்டுட்டு தொழில் பண்ணுறது சரி இல்லை”னு சொல்லியிருக்காங்க. இது கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கு, ஏன்னா பில் கேட்ஸ் தானே ஹார்வர்டை விட்டுட்டு மைக்ரோசாஃப்டை ஆரம்பிச்சவர்! பியோபி இதைப் பத்தி சிரிச்சுக்கிட்டே சொல்லியிருக்காங்க, “என்னோட அப்பா அப்படி பண்ணினதால தான் நான் ஸ்டான்ஃபோர்டுல படிக்க முடிஞ்சது, ஆனா எனக்கு அந்த வாய்ப்பு கொடுக்கலை”னு.
பில் கேட்ஸோட இந்த முடிவு, ஒரு பெற்றோரா இவரோட மதிப்புகளை காட்டுது. இவர் தன்னோட குழந்தைகளுக்கு எல்லாத்தையும் எளிதா கொடுக்க விரும்பலை, மாறாக, அவங்க சொந்தமா முயற்சி செய்யணும், தோல்விகளை எதிர்கொள்ளணும்னு நினைக்குறாரு. இது ஒரு பக்கம், இளம் தொழில்முனைவோருக்கு ஒரு முக்கியமான பாடத்தை சொல்றது. பணம் இருந்தாலும், சுதந்திரமான முடிவெடுக்குற திறன், சொந்த முயற்சி இவையெல்லாம் ஒரு தொழிலோட வெற்றிக்கு ரொம்ப முக்கியம்.
இன்னொரு பக்கம், இது கேட்ஸ் குடும்பத்தோட பொறுப்புணர்வை காட்டுது. பில் கேட்ஸும் மெலிண்டாவும், தங்களோட பெரும்பாலான சொத்தை பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கொடுத்து, உலகத்துலயே தேவைப்படுறவங்களுக்கு உதவுறாங்க. இவங்க குழந்தைகளும் இந்த மதிப்புகளை புரிஞ்சு, தங்களோட சொந்த பாதையை உருவாக்குறாங்க. பியோபியோட Phia ஆப், இந்த மதிப்புகளோட ஒரு புது தொடக்கமா பார்க்கப்படுது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்