saisharan  
மாவட்டம்

“சிறுவனின் உயிருக்கு எமனான வாழைப்பழம்” - 5 வயது மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்கள்.. மூச்சுக்குழலில் சிக்கிய பழத்தால் நடந்த பயங்கரம்!

பாட்டி வீட்டில் வாங்கி வைத்திருந்த வாழைப்பழத்தை பார்த்து அவரது நண்பர்களுடன் சேர்ந்து...

Mahalakshmi Somasundaram

ஈரோடு மாவட்டம், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் மகன் சாய்சரணை வேலைக்கு செல்லும் போது சத்யாவின் தாய் வீட்டில் விட்டு விட்டு மீண்டும் மாலை வேலை முடிந்தது தங்களது வீட்டிற்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.

வழக்கம் போல இன்று காலை வேலைக்கு செல்லும் போது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சாய்சரணை அவரது பாட்டி வீட்டில் விட்டு சென்றிருக்கின்றனர். அப்போது நண்பர்களுடன் விள்ளயடி கொண்டிருந்த சாய்சரண் அவரது பாட்டி வீட்டில் வாங்கி வைத்திருந்த வாழைப்பழத்தை பார்த்து அவரது நண்பர்களுடன் சேர்ந்து உரித்து சாப்பிட்டுள்ளார். அப்போது வாழைப்பழம் உணவு குழலுக்குள் செல்லாமல் மூச்சு குழலில் சிக்கி சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டு உள்ளார்.

இதனை பார்த்த சிறுவனின் பாட்டி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர், தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார் சாய்சரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவத்தால் சாய்சரனின் பெற்றோர்களான மாணிக்கம் மற்றும் முத்துலட்சுமி சிறுவனை நினைத்து கதறி அழும் காட்சிகள் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது சாய்சரண் குடும்பத்தினர் மற்றும் பெற்றோர்கள் இடையே இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.