கன்னியாகுமரி மாவட்டம், நேதாஜி காலனியை சேர்ந்தவர் மகேஷ். ஆட்டோ டிரைவரான இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் இரண்டாவது மகனான 21 வயதுடைய பிரதீப் அதே பகுதியில் பெயின்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய தீபிகா என்ற சிறுமியுடன் பிரதீப்புக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது.
எனவே தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில் அடிக்கடி வெளியில் சுற்றி வந்திருக்கின்றனர். சிறுமி தீபிகாவின் தந்தை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தாய் விஜயலட்சுமி தூய்மை பணியாளராக பனி புரிந்து வருகிறார். தீபிகா மற்றும் பிரதீப் காதல் குறித்து அறிந்த விஜயலட்சுமி அவரது மகளை கண்டித்தததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் மாணவி பிரதீப்புடன் தொடர்ந்து பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பிரதீப் தந்தையின் ஆட்டோவில் தீபிகா நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இதை அறிந்த விஜயலட்சுமி மீண்டும் அவரது மகள் தீபிகாவை கடுமையான வார்த்தைகளால் பேசி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தம் அடைந்த மாணவி வீட்டில் யாரிடமும் பேசாமல், அமைதியாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று விஜயலெட்சுமி வேலைக்கு சென்று விட்ட நிலையில் தனது தங்கையுடன் வீட்டில் தனியாக இருந்த தீபிகா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இதனை பார்த்து பயந்த தீபிகாவின் தங்கை இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவல் அறிந்து வந்த கன்னியாகுமரி போலீசார் தீபிகா உடலை கைபற்றி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தீபிகா தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து தீபிகாவின் காதலன் பிரதீப்பும் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார்.
பின்னர் தனது காதலியின் உடல் கொண்டு செல்லப்பட்டதை கண்டு, தாங்காத மனவேதனையில், இருந்த பிரதீப்பும் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கன்னியாகுமரி போலீசார் பிரதீப்பின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்,காதலி இறந்த சில மணி நேரத்தில் காதலுனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.