நாமக்கல் மாவட்டம், ஏ.எஸ்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி, இவரது மகள் 21 வயதுடைய நந்தினி. இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் ராசிபுரம் கோனேரிப்பட்டியை சேர்ந்த 26 வயதுடைய அஜய் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக நந்தினி காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் ஒரே சமூகம் மற்றும் சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் நந்தினியின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
நந்தியின் வீட்டிலிருந்து கல்லூரி தொலைவில் உள்ளதால் தினந்தோறும் நந்தினி கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில் நந்தினியும் அஜயும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அஜய் வீட்டில் இவர்களது காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் இவர்களது முடிவுக்கு அஜய் குடும்பத்தினர் ஆதரவாக இருந்துள்ளனர். எனவே நந்தினியின் வீட்டிற்கு தெரியாமல் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
அதன் படி நேற்று நந்தினி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு பேருந்தில் வீடு திரும்பும் போது சேலம் சாலையில் உள்ள சிக்னலில் பேருந்தில் இருந்து கீழே இறங்கி உள்ளார். அப்போது ஏற்கனவே வாடகை காரில் காத்திருந்த காதலன் அஜய், அவரது மாமா யுவராஜ், அண்ணி ஜெயலட்சுமி ஆகியோர் நந்தினியை அழைத்து செல்ல காரில் ஏற்றும் போது அங்கு நந்தினியை வீட்டிற்கு அழைத்து செல்ல காத்திருந்த தந்தை தண்டபாணி, மகளை காரில் ஏற்றி செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சிலிட்டுள்ளார். மேலும் காரின் கண்ணாடியை உடைத்து மகளை மீட்க முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து காதலர்கள் உள்பட 4 பேரும் காரில் நாமக்கல் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைய செல்லும் போது காதலன் அஜய் நந்தினியின் கழுத்தில் தாலி கட்டியும் மேலும் மோதிரமும் மாற்றி திருமணம் செய்து கொண்டு காதலர்கள் இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததால் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி இருவரையும் காதலன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். முன்னதாக பெண்ணின் வீட்டார்கள் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.