madurai veeramakaliamman kovil festival  Admin
மாவட்டம்

"பதினைந்தாயிரம் பக்தர்கள் நேர்த்திக்கடன்" - பறவை காவடி மற்றும் பால் காவடியுடன் சாமி தரிசனம்.. மதுரை வீரகாளியம்மன் கோவிலில் கோலாகலம்!

வீரகாளியம்மன் கோவிலுக்கு அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும், வேல்குத்தியும், பறவை காவடி எடுத்தபடியும் வைகை ஆற்றில் இருந்து ஜெய்ஹிந்த் புரம் வரை ஊர்வலம் சென்றனர்.

Anbarasan

மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் மிகவும் பழமைவாய்ந்த, இந்த ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் உள்ளது, கோவிலின் 73 ஆவது ஆண்டு பங்குனி, உற்சவ விழா கொடியேற்றம் (மார்ச் 21) ஆம் தேதி நடைபெற்றது, அதனை தொடர்ந்து (ஏப்ரல் 4 ) ஆம் தேதி காப்பும் கட்டும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று, காலை 5 மணி முதல் பதினைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில், ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலுக்கு அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும், வேல்குத்தியும், பறவை காவடி எடுத்தபடியும் வைகை ஆற்றில் இருந்து ஜெய்ஹிந்த் புரம் வரை ஊர்வலம் சென்றனர்.

இதில் 10,000 மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 5,000 மேற்பட்டோர் பக்தர்கள் வேல் குத்தியபடியும், 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் (50 அடி முதல் 30 அடி வரையும்) மூன்று முதல் ஐந்து அடுக்கு பறவை காவடி எடுத்தும், தேர்காவடிகள், பால்காவடிகள், எடுத்தும் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினார்கள், 15,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, ஊர்வலமாக சென்றதால் மாநகர் சாலைகள் முழுவதிலும் திருவிழா கோலம் பூண்டது, இந்த விழாவினை தொடர்ந்து நாளை ஊர்ப் பொங்கல் வைத்தால், அக்னி சட்டி எடுத்தால், முளைப்பாரி ஊர்வலமும், வருகின்ற (ஏப்ரல் 14) ஆம் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்